Homeசெய்திகள்அரசியல்ஒரு தொண்டனாக பாஜகவிற்கு உழைக்க தயாா்: அண்ணாமலை அறிவிப்பு!

ஒரு தொண்டனாக பாஜகவிற்கு உழைக்க தயாா்: அண்ணாமலை அறிவிப்பு!

-

- Advertisement -

அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட உள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் மாற்றம் செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு தொண்டனாக பாஜகவிற்கு உழைக்க தயாா்: அண்ணாமலை அறிவிப்பு!

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மூத்த நிர்வாகிகள் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய பிறகு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு அழைக்கப்பட்டார். அவரிடம்  கூட்டணி குறித்து கேட்கப்பட்டதாக கூறப்படும் நிலையில்,  அப்படி ஒரு கூட்டணி அமைந்தால் மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, ஒரு தொண்டனாக பாஜகவிற்கு உழைக்க தயாராக உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

இதனைத் தொடர்ந்து பாஜகவின் மூத்த தலைவர்களாக இருக்கக்கூடிய பொன் ராதாகிருஷ்ணன், எச் ராஜா, கருப்பு முருகானந்தம் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், தமிழிசை உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்களிடம் ஒன்றிய  உள்துறை அமைச்சர் நேரடியாக கருத்துக்களை கேட்டறிந்ததாக கூறப்படும் நிலையில், அதில் பெரும்பாலான மூத்த நிர்வாகிகள் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிகிறது. இதனை தொடர்ந்து இந்த கருத்து அண்ணாமலைக்கு பகிரப்பட்டபோது அண்ணாமலை உடன்படவில்லை.

இதற்கு முன்பாக அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்டால் நான் மாநில தலைவர் பதவியில் தொடர மாட்டேன் என அண்ணாமலை கூறியிருந்தாா். ஏப்ரல் 6  தேதி தமிழகம் வரும் பிரதமரை அதிமுக பொதுச்செயலாளர் உட்பட முக்கிய நிர்வாகிகள் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் தமிழக பாஜக தலைவராக சட்டமன்ற குழு தலைவர் நைனார் நாகேந்திரன், எல்.முருகன்  அல்லது வானதி சீனிவாசனுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அதிமுகவுடன் மிக நெருக்கமாக பழகக்கூடிய நபர்கள் என்பதால் அகில இந்திய தலைமையில் முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அச்சுறுத்தலாகும் தெருநாய்க்கடி: ஒன்றினைந்து தீர்வு காண வேண்டும் – அன்புமணி அறிவுறுத்தல்

MUST READ