இது ஒரு தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான போராட்டம் அல்ல, நியாயமான தொகுதி மறுசீரமைப்பை வலியுறுத்தும் கூட்டணியாகும், இந்த கூட்டணியை, ” நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கை குழு” என பெயரிடப்படுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினாா்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை பின்வருமாறு, ” இந்திய ஜனநாயகத்தையும் கூட்டாட்சி தத்துவத்தையும் பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். , நியாயமான தொகுதி மறுசீர் அமைப்பை வலியுறுத்தி நாட்டின் வளர்ச்சியில் பங்களித்துள்ள மாநிலங்கள் ஒருங்கிணையும் இன்றைய நாள் வரலாற்றில் பொறிக்கப்படும். தொகுதிகளின் எண்ணிக்கையை குறைப்பது மாநிலங்களின் அரசியல் வலிமயை குறைப்பதற்கு சமம். தொகுதி மறுவரையை ஏற்க முடியாது என்பதில் உறுதியுடன் உள்ளோம். இது எண்ணிக்கைகளின் கணக்கில் மட்டும் பார்க்கக் கூடிய விஷயமல்ல, நமது அதிகாரத்தையும் பிரதிநிதித்துவத்தையும் பறிக்கக்கூடி முயற்சி என்று விளக்கமளித்தாா்.
“இந்திய ஜனநாயகத்தைக் காக்க ஓரணியில் இணைந்துள்ளோம். இந்தியக் கூட்டாட்சியைக் காக்கும் வரலாற்றின் மிக முக்கியமான நாள் இது. மாநிலக் கட்சியின் அழைப்பை ஏற்று இத்தனை கட்சிகள் பங்கேற்பது மாபெரும் சிறப்பு மிக்க இந்த நாள் வரலாற்றில் பெறிக்கப்படும். மாநிலங்கள் சுயாட்சியுடன் இருப்பதே கூட்டாட்சி. இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்கு பாதிப்பு வந்துள்ளது.
தொகுதி மறுவவரை சாதாரணமாகக் கருதக் கூடாது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்யப்பட்டால் நமது மாநில தொகுதிகள் குறையும். மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டா் நமது கருத்துக்களை சொல்வதற்கான வலிமை குறையும். நாடாளுமன்றத்தில் நமது பிரதிநிதித்துவம் குறைந்தால் நமது அரசியல் வலிமையை குறைவதாகத்தான் கருத முடியும். பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டால் நமது விருப்பமில்லாமல் சட்டங்கள் இயற்றப்படும். பிரதிநிதித்துவம் குறைந்தால் மாநில நிதிக்கான உரிமைக்காக போராட வேண்டிய நலை உருவாகும். நமது மக்களைப் பாதிக்கும் முடிவுகள், நம்மை அறியாதவர்களால் எடுக்கப்படும். பெண்கள் அதிகாரம் அடைவதில் சங்கடங்களை சந்திப்பார்கள்; மாணவர்கள் வாய்ப்புகள் பாதிக்கப்படலாம்.
விவசாயிகளுக்கான ஆதரவு குறையும், நமது கலாச்சாரம், அடையாளம், முன்னேற்றம் ஆபத்தை அடையும். காலம் காலமாக நாம் போற்றிப் பாதுகாத்து வரும் சமூக நீதி குலைந்துவிடும். நம் சொந்த நாட்டில் நாமே அரசியல் அதிகாரம் குறைந்த குடிமக்களாக மாறும் அபாயம் ஏற்படும் . மணிப்பபூர் மாநிலத்தின் தற்போதைய நிலை ஒரு எடுத்துக்காட்டு. கடந்த 2 ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது; அதை கேட்க அவர்களுக்கு வலிமை இல்லை. தொகுதி மறுசீரமைப்பின் விலைவாக தென் மாநிலங்கள் 100 தொகுதிகளை இழக்க நேரிடும் என பிரதமரே ஒப்புக்கொண்டுள்ளாா்.
நமது போராட்டம் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானது அல்ல; நியாயமான மறுசீரமைப்பை வலியுறுத்தும் கூட்டணியாகும். ஓரணியில் திரண்டுள்ள கட்சிகளின் குழுவுக்கு ”நியாயமான தொகுதி மறுசீரமப்புக்கான கூட்டு நடவடிக்கை குழு” என பெயரிடப்படுகிறது. தொகுதி மறுசீரமைப்பின் அபாயம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். எந்த மாநிலமும் தொகுதிகள் குறைவதை ஏற்றுக் கொள்ளக் கூடாது. இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட மாநிலங்கள் சுயாட்சி தன்மையுடன் செயல்பட வேண்டும். எந்த சூழலிலும் நம் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது என உறுதியோடு போராடுவோம். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக வல்லுநர் குழு அமைக்க வேண்டும் என பரிந்துரைக்கிறேன்.,”இவ்வாறு பேசினார்.
இது ஆரம்பம்தான்… இன்னும் அவர்கள் பார்க்க வேண்டியது நிறைய- டி.கே.சிவகுமார்..!