Homeசெய்திகள்அரசியல்ரூ 1.5 லட்சம் கோடி… படி அளக்கக்கூடிய பகவான் அமைச்சர் மூர்த்தி- தங்கம் தென்னரசு நெகிழ்ச்சி..!

ரூ 1.5 லட்சம் கோடி… படி அளக்கக்கூடிய பகவான் அமைச்சர் மூர்த்தி- தங்கம் தென்னரசு நெகிழ்ச்சி..!

-

- Advertisement -

”நிதித்துறைக்கு படி அளக்கக்கூடிய பகவானாக அமைச்சர் மூர்த்தி இருக்கிறார் தமிழக பட்ஜெட் ரூ‌ 4 லட்சம் கோடி என்றால் வணிகவரித்துறையில் இருந்து ரூ 1.5 லட்சம் கோடியும், பதிவுத்துறையில் இருந்து ரூ 20 ஆயிரம் கோடியும் வருகிறது” என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நெகிழ்ந்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே, ம.ரெட்டியபட்டியில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் திறப்பிற்கு பின் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், ”அமைச்சர் மூர்த்தி மிகச் சிறப்பான வகையிலே இந்த இரு துறைகளுக்கும் இன்றைக்கு பொறுப்பேற்றுக் கொண்டு பணியாற்றுகிறார். அவருடைய பணிகளை மதுரை மாவட்டத்து மக்கள், அவருடைய தொகுதியினுடைய மதுரை கிழக்கு மக்கள் எந்த அளவிற்கு பெரும் பயன்களை பெறுகிறார்களோ, அந்த அளவிற்கு நிதி துறை அமைச்சர் என்ற வகையில் அவராலே மிகப்பெரிய பயனாளி ஒருவர் உலகத்தில் இருக்கிறார் என்று சொன்னால் அது தங்கம் தென்னரசு தான்.

Minister Murthy

அதற்கு காரணம் நிதித்துறை அமைச்சர் என்ற வகையில் பல்வேறு திட்டங்களுக்கு நிதியை ஒதுக்குவது தான் என் வேலை. நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.இவர் நிதி அமைச்சர் அதனால் அவரிடம் நிறைய பணம் இருக்கும் இருக்கும் போல தெரிகிறது என நினைக்கிறார்கள்.

பல்வேறு திட்டங்களுக்கு தேவையான அளவிற்கு ஒதுக்கி கொடுப்பதில் தான் அவருக்கு வேலை இருக்கிறது. ஒரு துறையிலிருந்த பணம் நமக்கு வந்தால் தான் நாட்டினுடைய மக்களுக்கு பல திட்டங்களை நம்மால் நிறைவேற்ற முடியும். எங்களுக்கு படி அளக்கக்கூடிய பகவான் என்கின்ற முறையில் ஒருவர் இருக்கிறார் என்று சொன்னால் அது மூர்த்தி தான்‌.

அவருடைய துறைகளில் இருந்து தான் அதிக பணம் வருகிறது. தமிழ்நாடு பட்ஜெட் ரூ 4 லட்சம் கோடி என்று சொன்னால் அவருடைய துறையான வணிகவரித்துறையிலிருந்து ஏறத்தாழ ரூ 1.5 லட்சம் கோடி வருகிறது. ஏறத்தாழ ரூபாய் 20,000 கோடி அளவிற்கு பதிவுத்துறையில் இருந்து பணம் வருகிறது.பழைய ஓய்வூதிய திட்டத்தை பரிசீலிக்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு

இன்னும் கூட நான் பெருமையாக சொல்வேன். இந்தியாவில் இருக்கக்கூடிய அத்தனை மாநிலங்களிலும் இந்த வணிகவரிகளை ஜிஎஸ்டி வசூலிலே எல்லா மாநிலங்களை காட்டிலும், ஏன் இந்திய சராசரியை விட மிக அதிகமான அளவிலே நம்முடைய மாநிலத்திற்கும், ஒன்றிய அரசுக்கும் அந்த வரி வருவாய் ஈட்டி தரக்கூடிய பெருமை நம்முடைய பத்திர பதிவுத்துறை அமைச்சருக்கும், அவருக்கு உடனிருந்து பணியாற்றக்கூடிய அதிகாரிகளுக்கும்‌ உண்டு என்பதை நான்‌ மனம் திறந்து சொல்வேன்.பத்திரப்பதிவுத்துறையில் கடந்த மூன்று ஆண்டுகளில் அபாரமான வளர்ச்சியை தந்திருக்கிறார்கள்” என பேசினார்.

MUST READ