Homeசெய்திகள்அரசியல்ரூ.2,700 கோடி பங்களா, ரூ.8,400 கோடி விமானம், ரூ.10 லட்சம் கோட்: மோடியை கலங்கடித்த கெஜ்ரிவால்..!

ரூ.2,700 கோடி பங்களா, ரூ.8,400 கோடி விமானம், ரூ.10 லட்சம் கோட்: மோடியை கலங்கடித்த கெஜ்ரிவால்..!

-

- Advertisement -

சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க டெல்லியில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, ‘‘ஆம் ஆத்மி கட்சி டெல்லிக்கு பேரழிவு. அந்த அரசின் கழுத்து ஆழமான ஊழலில் சிக்கியுள்ளது’’என குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பாஜகவுக்கு எதிராக 3 வகையான தாக்குதலை அள்ளித் தூற்றியுள்ளார். ‘‘பேரழிவு டெல்லியில் இல்லை. பாஜகவிற்குள் உள்ளது’’ என குற்றச்சாட்டை திசைதிருப்பியுள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியப்படாது – இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு

‘‘டெல்லியில் குடிசைவாசிகளுக்கான வீட்டு வசதித் திட்டத்தின் தொடக்க விழாவில் ஆம் ஆத்மி அரசு தொடர்ச்சியான ஊழலில் ஈடுபட்டது. ஆம் ஆத்மி அரசு மதுபான ஊழல், பள்ளி ஊழல், மாசு ஊழல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளது’’என மோடி குற்றம் சாட்டினார்.

டெல்லியில் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான தனது உறுதிப்பாட்டை வலியுறுத்திய பிரதமர், “என் நாட்டு மக்களுக்கு நிரந்தர வீடுகள் இருக்க வேண்டும் என்பதே எனது கனவாக நான் ஒரு கண்ணாடி அரண்மனையை கட்டியிருக்கிறேன்’’என்றார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள கெஜ்ரிவால், “தனக்கென ரூ.2,700 கோடியில் வீடு கட்டி, ரூ.8,400 கோடி மதிப்பிலான விமானத்தில் பறந்து, ரூ.10 லட்சம் மதிப்பிலான உடைகளை அணிந்து செல்லும் பிரடமர் கண்ணாடி மாளிகை கட்டியிருப்பதாக பேசுவது பொருத்தமற்றது.

டெல்லி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியது பாஜக. 2020 தேர்தல் அறிக்கையில், 2022 ஆம் ஆண்டுக்குள் டெல்லியில் அனைவருக்கும் வீடுகள் வழங்கப்படும் என்று பாஜக உறுதியளித்தது. ஆனால் 2025 ஆம் ஆண்டில் 4,700 வீடுகள் மட்டுமே மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
டெல்லியில் 4 லட்சம் குடிசைகள் உள்ளன. 15 லட்சம் மக்களுக்கு வீடுகள் தேவை’’ என பதிலடி கொடுத்துள்ளார்.

தேர்தல் நெருங்கி வருவதால், வரும் நாட்களில் பாஜக- ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையேயான வார்த்தைப் போர் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ