நாடு முழுவதும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை 4-ல் இருந்து இரண்டாக குறைக்கும் இந்திய ரயில்வேயின் அறிவிப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை 4-ல் இருந்து 2-ஆக குறைத்துள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.26 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை குறைத்து, அதற்கு பதிலாக, ஏசி 3 டையர் பெட்டிகளை இணைக்க திட்டமிட்டுள்ளது.சென்னையில் இருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாகச் செல்லும் ரயில்களின் முன்பதிவில்லாப் பெட்டிகள் இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலி தனது எக்ஸ் தளப்பதிவில் , “சமூக வலைத்தளம் முழுக்க இரயில் பரிதாபங்கள் வீடியோக்களைப் பார்த்தோம். அதைப் பார்த்தாவது எளிய மக்களுக்கான முன் பதிவில்லா பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல பரிதாபங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது Sadist அரசு!” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.
நாடு முழுவதும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை 4-ல் இருந்து இரண்டாக குறைக்கும் இந்திய ரயில்வேயின் அறிவிப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை 4-ல் இருந்து 2-ஆக குறைத்துள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.26 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளை குறைத்து, அதற்கு பதிலாக, ஏசி 3 டையர் பெட்டிகளை இணைக்க திட்டமிட்டுள்ளது.2 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட புதிய ரயில்வே கொள்கையின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே அறிவித்து இருக்கிறது. சென்னையில் இருந்து அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாகச் செல்லும் ரயில்களின் முன்பதிவில்லாப் பெட்டிகள் இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலி தனது எக்ஸ் தளப்பதிவில் , “சமூக வலைத்தளம் முழுக்க இரயில் பரிதாபங்கள் வீடியோக்களைப் பார்த்தோம். அதைப் பார்த்தாவது எளிய மக்களுக்கான முன் பதிவில்லா பெட்டிகளைக் கூட்டுவார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல பரிதாபங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது Sadist அரசு!” எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.
ரயில்களில் தற்போது நான்கு முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் நிலையில் அதில் கூட சில நேரங்களில் நிற்கக்கூட இடம் இல்லாத அளவுக்கு பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது நான்கிலிருந்து இரண்டாக முன்பதிவில்லா பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பல மாநிலங்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் இடமில்லாததால் முன் பதிவு செய்த பெட்டிகளில் பயணம் வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.