Homeசெய்திகள்அரசியல்உருவாகிறது புதிய கூட்டணி! தெலங்கானா முதல்வர் மகளுடன் சரத்குமார் சந்திப்பு

உருவாகிறது புதிய கூட்டணி! தெலங்கானா முதல்வர் மகளுடன் சரத்குமார் சந்திப்பு

-

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் எம்எல்சி கவிதாவை சந்தித்தார்.

சரத்குமார்

தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை தேசிய அளவில் கொண்டு செல்லும் விதமாக தனது கட்சியை பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியாக அறிவித்து தேர்தல் ஆணையம் மூலம் அதிகாரம் பூர்வமாக அனுமதி பெற்று தேசிய கட்சியாக செயல்படுத்தி வருகிறார். கடந்த வாரம் கம்மம் பொதுக்கூட்டத்தில் கேரளா, டெல்லி, பஞ்சாப் முதல்வர்கள் பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான், உத்தர பிரதேஷ் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்பட தேசிய அளவில் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் கூடிய மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியை தேசிய அளவில் அனைத்து மாநிலங்களிலும் கொண்டு செல்லும் விதமாக சந்திரசேகர ராவ் வியூகம் வகுத்து வருகிறார். இதற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்து தனது கட்சியை வலுப்படுத்த திட்டமிட்டு வருகிறார். கர்நாடகாவில் ஏற்கனவே நடிகர் பிரகாஷ்ராஜ் மூலம் தனது கட்சியை கொண்டு சென்றுள்ள நிலையில் முன்னாள் முதல்வர் குமாரசுவாமி உடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவை சந்தித்துள்ளார். பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியை தமிழகத்தில் வலுப்படுத்தும் விதமாக சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்து செல்வதற்காக இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதா என்று சர்ச்சை தற்போது ஏற்படுத்தி உள்ளது.

MUST READ