Homeசெய்திகள்அரசியல்சசிகாந்த் செந்தில் முழக்கத்திற்கு பாஜக எம்.பி-க்கள் எதிர்ப்பு

சசிகாந்த் செந்தில் முழக்கத்திற்கு பாஜக எம்.பி-க்கள் எதிர்ப்பு

-

சசிகாந்த் செந்தில் முழக்கத்திற்கு பாஜக எம்.பி-க்கள் எதிர்ப்பு

18-வது பாராளுமன்ற மக்களவையின் கூட்டத்தொடரின்  இரண்டாவது நாளாக 40 எம்.பி -க்கள்  பதவியேற்றனர்.

அந்த வரிசையில் தற்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வெற்றி பெற்ற திமுக கூட்டணியை சேர்ந்த 40 எம்பிக்கள் தமிழில் பதவியேற்றனர்.

டி ஆர் பாலு, செல்வம், ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன் தயாநிதி மாறன், சசிகாந்த் செந்தில் உள்ளிட்டோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.

தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை தடுக்க வேண்டும் – முதலமைச்சர் கடிதம்!

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 7,96,956  வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வெற்றி பெற்றார். நாடாளுமன்ற கூட்டத்தொடரில்  தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது, தலித்துகள், சிறுபான்மையினர் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என அவர் முழக்கம் எழுப்பினார். அவரது முழக்கத்திற்கு பாஜக எம்.பி-க்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, எதிர்க்கட்சி எம்.பி-க்கள் எதிர் குரல் எழுப்பினர்.

MUST READ