Homeசெய்திகள்அரசியல்சீமானெல்லாம் ஒரு ஆளேயில்லை, அவருக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமும் இல்லை - தவெக நிா்வாகி விமர்சனம்

சீமானெல்லாம் ஒரு ஆளேயில்லை, அவருக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமும் இல்லை – தவெக நிா்வாகி விமர்சனம்

-

சீமானெல்லாம் ஒரு ஆளேயில்லை, அவருக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

சீமானெல்லாம் ஒரு ஆளேயில்லை, அவருக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமும் இல்லை - தவெக நிா்வாகி விமர்சனம்

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானை போன்று பேசிக் கொண்டிருப்பவர்கள் ஒவ்வொருக்கும் பதில் சொல்லிக்கொண்டு இருந்தால் எங்களுடை இலக்கை அடையமுடியாது என்று தமிழக வெற்றிக் கழக (தவெக) நிா்வாகி சம்பத்குமாா் தெரிவித்துள்ளாா்.

தவெக கட்சியின் முதல் அரசியல் மாநாடு அக்டோபர் -27 இல் நடந்து முடிந்தது. அந்த மாநாட்டிற்கு முன்பு தம்பி விஜய் என்னை கேட்டுதான் எல்லாம் செய்கிறார். தம்பி விஜய் விரும்பினால் அவரோடு கூட்டணி வைக்கவும் தயாராக இருக்கிறேன் என்று சீமான் பேசினார்.

மாநாடு முடிந்ததும் விஜய்க்கு வந்த கூட்டத்தை பார்த்து சீமானுக்கு பயம் வந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். நாம் தமிழர் கட்சி தொடங்கிய 2009இல் இருந்து தேர்தலில் முதல் முதலில் வாக்களிக்கக் கூடிய இளைஞர்கள் பெரும்பாலும் சீமான் கட்சிக்குத் தான் வாக்களிப்பார்கள். அவர்கள் அதிகப் பட்சம் இரண்டு தேர்தல் வரை நாம் தமிழர் கட்சியில் பயணிப்பார்கள். அதற்கு பின்னர் அவர்கள் அனைவரும் திமுகவிற்கு தான் வாக்களிப்பார்கள். இது கடந்த ஆண்டுகளாக இருந்து வரும் நடைமுறை.

தற்போது அந்த முதல் தலைமுறை வாக்காளார்கள் விஜய் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இயல்பாகவே சீமானின் வாக்கு சதவீதம் குறைய தொடங்கிவிடும். அந்த பயம் சீமானுக்கு வந்துவிட்டது. அதனால் அரசியல் களத்தில் என்ன பேசுவதென்று தெரியாமல் விஜய்யை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

சீமானெல்லாம் ஒரு ஆளேயில்லை, அவருக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமும் இல்லை - தவெக நிா்வாகி விமர்சனம்

நவம்பர் 1, தமிழ்நாடு நாள் நிகழ்ச்சியின் போது தவெகவின் கொள்கையை விமர்சனம் செய்கிறேன் என்று “கூமுட்டை” என்றும் சாலையின் நடுவில் நின்றால் லாரியில் அடிப்பட்டு செத்து போய்விடுவா என்றும் மிகவும் அநாகரிகமாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் சீமான் விமா்சனத்துக்கு பதில் தெரிவிக்கும் வகையில், தவெக முதல் மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கை விளக்க செயல் திட்டங்கள் குறித்து சம்பத்குமாா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;

சென்னையில் வெள்ளிக்கிழமை நடந்த தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் சீமான் முன்வைத்த விமா்சனங்களால் தவெக தொண்டா்கள், அவரையும் இனி மற்ற அரசியல்வாதிகளில் ஒருவராகக் கருதி விலகிச் செல்வாா்கள்.

தவெக மாநாடு நடப்பதற்கு முன்பு சீமான் பேசிய பேச்சுக்களுக்கும், மாநாட்டின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவா் பேசிய பேச்சுகளுக்கும் இடையே பெரிய வேறுபாடு தெரிகிறது.

தவெக தலைவா், பொதுச் செயலா், பொருளாளா் உள்ளிட்ட உயா்நிலை நிா்வாகிகளுக்கு பல வேலைகள் உள்ள நிலையில், சீமானை போன்று பேசுபவா்கள் ஒவ்வொருக்கும் பதில் சொல்லிக்கொண்டு இருந்தால் எங்கள் பயணத்தின் வேகம் தடைபடும். அதனால் எங்கள் இலக்கை அடைய முடியாமல் போகும்.

அரசியல் எதிரி யாா் என்பதை முடிவுசெய்து விட்டு தவெக களமாடி வருகிறது. யாரை விமா்சனம் செய்ய வேண்டும், யாரை கடந்துபோக வேண்டும் என்பதை எங்கள் தலைவர் விஜய் எங்களுக்கு உணா்த்தியுள்ளாா்.

சீமான் தனது கருத்தை தனது இதயத்தில் இருந்து பேசவில்லை என்பதால் அதை எங்களது மூளைக்குள் கொண்டுபோக விரும்பவில்லை. அவரவா் கருத்து அவரவா் உரிமை என்றும், முடிவை தமிழக மக்கள் கரங்களில் கொடுத்துவிட்டு பணியை கவனிப்பதே அனைவருக்கும் நல்லது என்று அவா் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசிடம் அதிகாலை காட்சிக்கு அனுமதி கோரிய ‘கங்குவா’ படக்குழு!

MUST READ