Homeசெய்திகள்அரசியல்சீமான், விஜய் வார்த்தை மோதல் - நடிகர் பார்த்திபன் நக்கல் பதில்...

சீமான், விஜய் வார்த்தை மோதல் – நடிகர் பார்த்திபன் நக்கல் பதில்…

-

சீமான், விஜய் வார்த்தை மோதல் - நடிகர் பார்த்திபன் நக்கல் பதில்...புதுச்சேரியில் நடிகர் பார்த்திபன் அளித்த பேட்டியில் , மிஸ்டர் விஜய் இப்போது தான் பேச ஆரம்பித்திருக்கிறார்,அவர் ஒரு தவழும் குழந்தை மாதிரி. முன்பு பேசுவதற்கே பயப்படுவார். சீமான், விஜய் வார்த்தை மோதல் குறித்து கேள்விக்கு, நடிகர் பார்த்திபன் நக்கல் பதில் கொடுத்துள்ளார்.

தமிழக அரசியல் என்பது ஆரம்பித்தில் இருந்தே பேச்சு தான். பேச்சு மூலம் விஷயங்களை செயல்படுத்த விரும்புகிறோம். அண்ணாதுரை என்றாலும் சரி, கலைஞர் என்றாலும் சரி, பேசி தான் ஆட்சியை பிடித்திருக்கிறார்கள். மிஸ்டர் விஜய் இப்போதுதான் பேச ஆரம்பித்திருக்கிறார் அவர் ஒரு தவழும் குழந்தை மாதிரி. முன்பு பேசுவதற்கே பயப்படுவார். தற்போது தைரியமா பேச ஆரம்பித்திருக்கிறார் அது வாழ்த்து கூறிய விஷயம்.

மிஸ்டர் சீமான் ஆரம்பித்தில் இருந்தே ஓங்கிய பேச்சு தான் அவரின் செயல்பாடு. அதனால் இதுல சரி தப்புன்னு ஒரு ரூட் கிடையாது. யார் யாருக்கு எது சரியோ அது செய்து விட்டு போகலாம். வெளிநாட்டு அரசியல் இருப்பவன். இதுபோன்று பேசுவது கிடையாது. நம்ம ஊருக்கு பேச்சு சுவாரஸ்யமாக இருக்கிறது. அதனால் அதை வர வைக்க வரவேற்க வேண்டிய விஷயம் தான் என்றார்.

மேலும் பேசிய அவர், எனக்கு தெரிஞ்சு பெண்களுக்கு பாதுகாப்பு எங்கேயும் இருக்கு. பாதுகாப்பு என்பது முதலில் பெண்கள் இடமிருந்து ஆரம்பிக்கிறது. மலையாளம் திரைத்துறைக்கும், தமிழ்நாடு திரைத்துறைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. பத்மினி, ராகினி காலத்தில் இருந்தே பார்த்தீர்கள் என்றால் தமிழில் நடிப்பவர்கள் தான் மலையாளத்தில் நடிப்பார்கள்.

தற்போது மஞ்சு வாரியார், சாய் பல்லவி, கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் நடிப்பார்கள். தமிழில் நடிப்பார்கள். மலையாளத்தில் தனியான நட்சத்திரங்களோ, தமிழுக்கு என்று தனியான நட்சத்திரங்களோ இருப்பதாக எனக்கு தெரியவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு, இரு பக்கமும் சமமாக தான் இருக்கிறது என்றார்.

திருத்தணியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

MUST READ