நாகையில் தவெக கட்சிக்கு தாவிய நாம் தமிழர் கட்சியினர். சீமானின் கூடாரம் காலியாகி வருகிறது.
நாகை பகுதியைச் சார்ந்த நூற்றுக்கணக்கான நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளனர்.
நாகையில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தோர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்வு தமிழக வெற்றிக் கழக நாகை மாவட்ட செயலாளர் சுகுமாறன் தலைமையில் நடைபெற்றது. இதில் நாகை ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்கு பொய்கை நல்லூர், தெற்கு பொய்கை நல்லூர், செல்லூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நாம் தமிழர் கட்சியினர் மற்றும் செல்லூரைச் சேர்ந்த திமுக-வை சேர்ந்தவர்கள் பலரும் அக்கட்சிகளில் இருந்து விலகி, தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
தமிழக வெற்றிக் கழகத்தில் புதிதாக இணைந்த முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் இளைஞர்களை வரவேற்ற, நாகை மாவட்டச் செயலாளர் சுகுமாறன், அவர்களுக்கு சால்வை அணிவித்து அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள், நகர செயலாளர், வழக்கறிஞர் அணியினர், மகளிரணியினர் உள்ளிட்ட பலரும் திரளாக கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தூத்துக்குடியில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக விமான மூலம் தூத்துக்குடி வாகைகுளம் வந்திருந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், தமிழக மீனவர்களின் படகுகளை கைபற்றி வலைகள் கிழிக்கபடுகிறது. இதை விட என்ன கடுமையான நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என கூறினார்.
இந்திய பெருங்கடல் என்ற பெயர் இருந்தால் போதுமா அதில் மீன் மிடிக்க முடியவில்லை, மிக சிறிய நாடு அதற்கு எந்த நெருக்கடியும் கொடுக்க வில்லை
அவர்களுக்கு பயிற்சி கொடுப்பது மற்றும் பரிசு கொடுப்பது என்றிருந்தால் எப்படி அவர்களை கட்டுபடுத்த முடியும் எனக் கூறிய சீமான், மீனவர்கள் விவகாரத்தில் தற்போது சிறிய முன்னேற்றம் வந்திருக்கிறது தமிழக மீனவர்கள் என்று இருந்த இடத்தில் இந்திய மீனவர்கள் என வந்திருக்கிறது. அதுதான் முன்னேற்றம் என்று கூறினார்.
மேலும் நாகப்பட்டினத்தில் 200க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். அதைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு 500 வெற்றி கழகத்தினர் நாம் தமிழர் கட்சியில் இணை இருக்கிறார்கள். இதையெல்லாம் செய்தியாக கூறிக் கொள்வது கிடையாது இருந்தாலும் நாகப்பட்டினத்தில் 200 பேர் நாம் தமிழர் கட்சியினர் இருக்கிறார்கள் என பெருமையாக கூறியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
எல்லோரும் விரும்பும் திராவிடனாகவே இருக்க விரும்புகிறேன் – நடிகர் எஸ் வி சேகர் பேட்டி