Homeசெய்திகள்அரசியல்ராகுலுக்கு செல்லூர் ராஜு பிறந்தநாள் வாழ்த்து

ராகுலுக்கு செல்லூர் ராஜு பிறந்தநாள் வாழ்த்து

-

ராகுல் காந்திக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராகுலுக்கு செல்லூர் ராஜு பிறந்தநாள் வாழ்த்து

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று தனது 54 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பிறந்தநாள் விழாக்களை உற்சாகமாக நடத்தி வருகின்றனர். ராகுல் காந்தி பிறந்த நாளை ஒட்டி எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் கட்சி சிறப்பு காணொளியை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான ராகுல்காந்திக்கு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பிறந்தநாள் வாழ்த்து கூறி புகழாரம் சூட்டியுள்ளார்.

ராகுல் காந்திக்கு செல்லூர் ராஜு திடீர் புகழாரம் (apcnewstamil.com)

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செல்லூர் ராஜு, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற அண்ணாவின் பேச்சை குறிப்பிட்ட ராகுலுக்கு மீண்டும் புகழாரம் சூட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியை கட்டிக்காக்க வேண்டும் என்ற ராகுல் காந்தியின் விடாமுயற்சி பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ராகுல் காந்தியின் வீடியோவை வெளியிட்டு ‘நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர்’ என்று தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டு பாராட்டியிருந்தார்.

ராகுலுக்கு செல்லூர் ராஜு பிறந்தநாள் வாழ்த்து

அ.தி.மு.க தலைமை காங்கிரஸ் கட்சி தலைவரை செல்லூர் ராஜூ புகழ்ந்து பேசியது அதிர்ச்சி அளித்தாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து செல்லூர் ராஜூ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க நிர்வாகிகள் புகார் தெரிவித்தாகவும் இதனையடுத்து விமர்சனம் எழுந்ததால் புகழாரம் சூட்டிய பதிவை நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ