Homeசெய்திகள்அரசியல்அண்ணாமலையை தூக்கத் துடிக்கும் சீனியர்கள்... பாஜகவுக்கு நல்லதல்ல... எச்சரிக்கும் விமர்சகர்கள்..!

அண்ணாமலையை தூக்கத் துடிக்கும் சீனியர்கள்… பாஜகவுக்கு நல்லதல்ல… எச்சரிக்கும் விமர்சகர்கள்..!

-

- Advertisement -
kadalkanni

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை லண்டன் சென்று இருந்த காலகட்டத்தில் பெண் எம்எல்ஏ வானதி சீனிவாசன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அழைத்து வந்து வியாபாரிகளுடன் ஒரு ஆலோசனை கூட்டத்தை கோவையில் நடத்தினார். அதில் ஜிஎஸ்டி விவாதம் பெரும் பிரச்னையை கிளப்பியது.

அந்த வியாபாரியை மன்னிப்பு கேட்க வைத்த விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், லண்டனில் இருந்து அண்ணாமலை மன்னிப்பு கேட்டார். இதனால், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரொம்பவே அதிர்ச்சியாகி இருக்கிறார். இதையடுத்தே அவர் அண்ணாமலையை பற்றி பாஜக மேல்மட்ட தலைவர்களிடம் புட்டு புட்டு வைத்துள்ளார்.

அதன்பிறகு அண்ணாமலையை டெல்லி மேலிடம் கண்டுகொள்வதே இல்லை என்கிறார்கள். லண்டனில் இருந்து திரும்பி வந்த பிறகு இருமுறை டெல்லிக்கு சென்றார் அண்ணாமலை. ஆனால் மூன்று முக்கிய தலைவர்கள் இவரை சந்திக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வேதனையில் இருந்த அண்ணாமலை டெல்லியை தன்பக்கம் இழுக்க என்ன செய்யலாம் என்றிருந்த நிலையில்தான், சாட்டையால் தன்னைத்தானே அடித்து போராட்டம் நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

அண்ணாமலைக்கு கட்சி பணிகளில் இருந்து ஓய்வு?

இதனை தேசிய தலைவரின் கவனத்துக்கு கொண்டு போய் இருக்கிறார்கள். இதனை கேட்ட அவர் தன் தலையில் டமார் டமாரென அடித்துக் கொண்டதாகவும் தகவல். அதேபோல சவுக்கடி காட்சியை கெஞ்சி கேட்டும் மூத்த தலைவர்கள் அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்ய மறுத்து இருக்கிறார்கள். இதனால் கோபத்தின் உச்சத்துக்கே சென்ற அண்ணாமலை தலைவர் பதவியாவது, வெங்காயமாவது என அதிருப்திக்கு சென்றதாக பாஜக தமிழக நிர்வாகிகள் கூறுகிறார்கள். இதுகுறித்து நமது தளத்தில் நேற்றே செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இந்த விவகாரம் குறித்து அரசியல் விமர்சகர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது எக்ஸ்தளப்பதிவில் ‘‘தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாக் கட்சியை தான் தலைமையேற்றதிலிருந்து இன்று வரை நிலைப்பாடு செய்து அதனுடைய வளர்ச்சிக்கு தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கும் தமிழக பாரதிய ஜனதாக் கட்சி தலைவர் அண்ணாமலையைக் குறித்து தேவையில்லாத புகார்களைக் கிளப்பிக்கொண்டு பா.ஜ. கட்சியினரே டெல்லி வரை சென்று முறையிடுகிறார்கள்.

அண்ணாமலைக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே சிலர் இந்த முயற்சியை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு இளம் ஐபிஎஸ் அதிகாரி தன் பணியை ராஜினாமா செய்து விட்டு வந்து இந்த பொறுப்பை தலையில் சுமந்து இருக்கிறார் என்றால் அவருக்கு எல்லா வகையிலும் ஒத்துழைக்க வேண்டும். அதை விட்டுவிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி கொண்டிருப்பது தமிழ்நாடு பாரதிய ஜனதாக் கட்சிக்கு நன்மையாக முடியாது! இது என்னை போன்ற சிலருக்கு பொது வெளியில் தெரியும்’’ எனத்தெரிவித்துள்ளார்.

MUST READ