Homeசெய்திகள்அரசியல்கணவன், மனைவி பெயரில் தனித்தனியான ரேஷன் அட்டைகள் வழங்க வேண்டும் - எம்எல்ஏ அசோகன்

கணவன், மனைவி பெயரில் தனித்தனியான ரேஷன் அட்டைகள் வழங்க வேண்டும் – எம்எல்ஏ அசோகன்

-

நேற்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் சிவகாசி எம்எல்ஏ அசோகன் விவாகரத்து பெறாமல் பிரிந்து வாழும் கணவர்களுக்கு தனித்தனி ரேஷன் அட்டைகள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

கணவன், மனைவி பெயரில் தனித்தனியான ரேஷன் அட்டைகள் வழங்க வேண்டும் - எம்எல்ஏ அசோகன்

திருமணம் ஆன கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரியும் நிலையில் கணவன் வீட்டில் ரேஷன் கார்டுகள் மாட்டிக் கொள்கின்றன. இதனால் கணவனை பிரிந்து வாழும் மனைவி ரேஷன் பொருட்களை வாஙக இயலாத சூழ்நிலையில் தன் குழந்தையுடன் படாத பாடு படுகிறார். இப்படி பிரிந்து வாழ்பவர்க்கு தனியே ரேஷன் கார்டு இருந்தால் அவர்கள் அரசு வழங்கும் ரேஷன் பொருட்களைக் கொண்டாவது பிழைப்பு நடத்திக் கொள்ளலாம் என சிவகாசி எம்எல்ஏ அசோகன் தனித்தனி ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என்று பரிந்துரைதுள்ளர்.

 அதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு,

கணவன், மனைவி பெயரில் தனித்தனியான ரேஷன் அட்டைகள் வழங்க வேண்டும் - எம்எல்ஏ அசோகன்கணவரிடம் கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு சென்றிருந்தால் எப்படி தனித்தனியாக ரேஷன் அட்டைகள் வழங்க முடியும்? என்று வினவினார். சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றிருந்தால் மட்டுமே தனித்தனி ரேஷன் அட்டைகள் வழங்க முடியும் என்று கூறியுள்ளார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு நடைமுறை சாத்தியங்களை கருத்தில் கொண்டு இவ்வாறு கூறியுள்ளார்.

MUST READ