Homeசெய்திகள்அரசியல்ஷர்மிளாவை வெறுக்கும் ஜெகன் மோகன் ரெட்டி... ஒய்.எஸ்.ஆர் குடும்பத்தில் பேரழிவு..!

ஷர்மிளாவை வெறுக்கும் ஜெகன் மோகன் ரெட்டி… ஒய்.எஸ்.ஆர் குடும்பத்தில் பேரழிவு..!

-

- Advertisement -

ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் அவரது சகோதரி ஒய்.எஸ்.ஆர். ஷர்மிளாவுக்கும் இடையே பெரும்பகை மூண்டுள்ளது. சொத்துப் பங்கீடு தொடர்பாக நீதிமன்றம் சென்றுள்ளனர். தனிப்பட்ட சண்டையிலும் ஈடுபட்டுள்ளனர். இது இப்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

சொத்தில் தனக்கு உரிய பங்கை ஜெகன் வழங்கவில்லை என ஷர்மிளா குற்றம்சாட்டுகிறார். அரசியல் ரீதியாக ஷர்மிளா தனக்கு எதிரானவர் எனக் கூறி, ஷர்மிளாவுக்கு முதலில் கொடுத்த சொத்துக்களையும் திரும்பப் பெறக் கோரி, ஜெகன் நீதிமன்றம் சென்றுள்ளார்.

இந்நிலையில் ஜெகன் மற்றும் ஷர்மிளா இருவரும் ஒருவரையொருவர் அப்பட்டமாகப் புறக்கணித்து வருகின்றனர். நேற்று டிசம்பர் 21 ஆம் தேதி ஜெகன் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு ஷர்மிள வாழ்த்து தெரிவிக்க வரவில்லை. அதேபோல், ஐந்து நாட்களுக்கு முன்பு டிசம்பர் 17 அன்று சர்மிளாவின் பிறந்தநாளை ஜெகன் தற்செயலாக புறக்கணித்தார்.

2019 வரை வலுவான சகோதர-சகோதரி உறவில் இருந்து, ஜெகன் மற்றும் ஷர்மிளா இருவரும் தங்கள் பிறந்தநாளில் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைக் கூற முடியாத நிலையை அடைந்துள்ளனர். பிரபலமான ஒய்எஸ்ஆர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை அவர்களுக்கிடையே பேரழிவு தரும் எனக் கூறப்படுகிறது.

MUST READ