ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த செந்தில் முருகன் அமைச்சர் முத்துசாமி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்தார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக அதிமுகவில் இருந்து இபிஎஸ் நீக்கிய நிலையில், நேற்று தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார். இந்நிலையில் அவர் திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 2023ல் நடந்த இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ் அணியின் வேட்பாளராக யாரும் எதிர்பாராத வகையில் தீடீரென அறிவிக்கப்பட்டவர் செந்தில் முருகன்.
எடப்பாடி பழனிசாமி அணியில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், அதே நாளில் ஓ.பன்னீர்செல்வம் தனது அணியின் வேட்பாளராக செந்தில் முருகனை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அணியில் எந்தப் பதவியிலும் இல்லாதபோது அவரை எப்படி வேட்பாளராக அறிவிக்கலாம் என்ற விவாதம் எழுந்தபோது, அவசர அவசரமாக செந்தில் முருகனுக்கு கட்சியின் அமைப்புச் செயலாளர் என்கிற பதவியை இன்ஸ்டாண்டாக அறிவித்தார் அவரது தானைத் தலைவர் ஓ.பி.எஸ். இதனையடுத்து பாஜக தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதால், செந்தில் முருகன் போட்டியிலிருந்து வாபஸ் பெறுவதாக அறிவித்தார் ஓபிஎஸ்.
இடைத்தேர்தல் முடிந்த்து. காட்சிகள் மாறின. அதே சூட்டோடு அணி விட்டு அணி தாவினார் செந்தில் முருகன். நேராக எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குச் சென்ற செந்தில் முருகன் அவரது அணியில் ஐக்கியமாகி ஓ.பி.எஸுக்கே ஷாக் கொடுத்தார். அதே செந்தில் முருகன் தான் எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து கொண்டு சுயேட்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனால் வெறுபான எடப்பாடி பழனிசாமி, செந்தில் முருகனை கட்வியில் இருந்து நீக்க்கினார். இதனிடையே தனது வேட்புமனுவை வாபஸ் பெற்ற செந்தில் முருகன், யாரும் எதிர்பாராத வகையில் அமைச்சர் முத்துச்சாமி முன்னையில் திமுகவில் இணைந்தார். அவர், திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.