Homeசெய்திகள்அரசியல்பாகிஸ்தானைப்போல இந்தியா மாற வேண்டுமா..? மத்திய அரசுக்கு தமிமுன் அன்சாரி எச்சரிக்கை..!

பாகிஸ்தானைப்போல இந்தியா மாற வேண்டுமா..? மத்திய அரசுக்கு தமிமுன் அன்சாரி எச்சரிக்கை..!

-

- Advertisement -

”தமிழ்நாடு மக்களின் உணர்வுகளோடு விளையாடாதீர்கள். பிரதமர் மோடி அவர்களே மாநில உரிமைகளை மதியுங்கள்” என மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை எதிர்த்து சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், ”2,151 கோடி ரூபாய் நிதியை பெறுவதற்காக, 5000 ஆண்டுகால இனத்தின் வாழ்வுரிமையை ஒருபோதும் உங்கள் காலிலே நாங்கள் சமர்ப்பிக்க மாட்டோம். 5 ஆயிரம் ஆண்டு காலமாக மொழி உணர்வோடு, கம்பீரத்தோடு ஒட்டுமொத்த இந்தியாவிற்கு அரசியல் பாடம் எடுத்து கொண்டிருக்கக்கூடிய தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளுடன் விளையாடாதீர்கள். பாரத பிரதமரையும், மத்திய அமைச்சரையும் நாங்கள் எச்சரிக்கின்றோம்.

மொழி, கண் விழியைப் போன்றது. அது மதத்தை விட அடர்த்தியானது என்பதற்கு பாகிஸ்தான்- பங்களாதேஷ் ஓர் உதாரணம். மதத்தின் பெயராலே அவர்கள் விடுதலை பெற்றார்கள். தனிநாடு கேட்டார்கள். தனிநாடு கேட்ட பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் என்றும் மேற்கு பாகிஸ்தான் என்றும் அழைக்கப்பட்டது. ஆனால், கிழக்கு மையத்தில் அவர்களுடைய உரிமையும், மொழி உணர்வும் தூக்கி எறியப்பட்ட காரணத்தினால் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற்று பங்களாதேஷ் என்ற தனி நாடு உருவானது.

இதை இந்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த இந்தியாவும் படர்ந்து இருக்கக்கூடிய கூட்டாட்சி தத்துவத்திற்கு ஊறு விளைவித்து விடாதீர்கள். மணிப்பூரும், குஜராத்தும், காஷ்மீரும், தமிழ்நாடும் இந்திய ஒன்றியத்தில் இதே ஜனநாயகத் தன்மையுடன் நீடிக்க வேண்டும் என்று சொன்னால் மாநில உரிமைகளை மதியுங்கள். மொழி உரிமையை பறிக்காதீர்கள். உள்நாட்டிலே சர்வாதிகாரத்தை நிலைநாட்டக் கூடிய மோடி, அவர்களே… மொழி உரிமையை பிடுங்கக்கூடிய மோடி அவர்களே… இந்தியர்கள், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டபோது, கைகளில் விலங்கிடப்பட்டு மனித உரிமைகள் பறிக்கப்பட்ட அந்த நேரத்திலே… அவர்கள் விமானங்களில் வந்திருக்கக்கூடிய மோசமான நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்தீர்கள்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியப்படாது – இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு

அந்த நேரத்திலே ஒட்டுமொத்த இந்தியர்களின் உணர்வை உங்களால் வெளிப்படுத்த முடிந்ததா? அமெரிக்காவிடம் சரணாகதி அடைந்த மோடி அவர்களே… இந்தியாவின் ஜனநாயகத்தை வெளிநாட்டில் அடமானம் வைத்து விட்டு இந்தியாவின் ஜனநாயகத்தை அடமானம் வைத்து விட்டு, உள்நாட்டில் இந்தியருடைய மாநிலங்களின் உரிமைகளை பறிக்காதீர்கள். உங்கள் கொள்கையை திணிக்காதீர்கள். தமிழ்நாட்டின் வாழ்வுரிமையை பறிக்காதீர்கள்” என ‘உணர்ச்சி’கரமாக பேசினார்.

MUST READ