Homeசெய்திகள்அரசியல்அமமுக முக்கியப்புள்ளிக்கு ஸ்கெட்ச்… வலைவிரித்த விஜய்..!

அமமுக முக்கியப்புள்ளிக்கு ஸ்கெட்ச்… வலைவிரித்த விஜய்..!

-

- Advertisement -

‘அண்ணா, எம்.ஜி.ஆரைப் போல் தமிழகத்தில் புரட்சியை ஏற்படுத்தி ஆட்சியைப் பிடிப்பேன்’ என சபதம் எடுத்திருக்கிறார் த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய்! இந்த நிலையில்தான் முத்தரையார் சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய புள்ளிக்கு த.வெ.க. தலைமை வலை விரித்திருக்கிறது.

தமிழக அரசியல் களத்தில் எத்தனையோ பேர் கட்சி ஆரம்பித்தாலும் இளைஞர்கள், இளம்பெண்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் விஜய். தமிழகத்தில் மாற்று அரசியல் சக்தியை நோக்கி மக்கள் காத்திருக்கும்போது, விஜயகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு வரவேற்பு இருந்தது. விஜயகாந்த் மறைந்துவிட்டதாலும், கமல்ஹாசன் தி.மு.க.வில் அடைக்கலம் புகுந்ததாலும் அவர்களால் அரசியலில் சாதிக்க முடியவில்லை. ஆனால், ‘நான் சாதித்துக் காட்டுவேன்’ என சபதமெடுத்து அரசியல் கட்சியை துவங்கியிருக்கிறார் விஜய்.

த.வெ.க. தலைவர் விஜய்யின் முதல் அரசியல் மாநாட்டில் பல தலைவர்களின் புகைப்படங்கள் இருந்தாலும், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திண்டுக்கல், மதுரை, வேலூர் என பல்வேறு மாவட்டங்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கக்கூடிய சக்தியாக விளங்குபவர்கள் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அப்படிப்பட்ட சமுதாயத்தின் தலைவரான பெரும்பிடுகு முத்தரையரின் புகைப்படத்தை முதல் மாநாட்டில் வைத்து முத்தரையர்கள் மனதிலும் இடம்பிடித்தவர் நடிகர் விஜய்! சமீபத்தில், முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த முக்கியப் புள்ளி ஒருவரை த.வெ.க.வில் இணைப்பதற்கான மறைமுக வேலைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

முழுக்க முழுக்க ஆதவ் டெல்லியுடைய ஆள் - போட்டுடைக்கும் ஜீவசகாப்தன்!

அதாவது, த.வெ.க. தலைவர் விஜய்யைப் பொறுத்தளவில் தனது கட்சியில் சேருபவர்கள் மீது ஊழலை கறைபடிந்திருக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். அந்தவகையில் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் முசிறி செல்வராஜின் சகோதரர் மகன் துரை செல்வமோகனைத்தான் த.வெ.க.வினர் குறி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

முத்தரையர் சமுதாய மக்கள் மத்தியில் முசிறி செல்வராஜுக்கு நல்லப் பெயர் உண்டு. அரசியல் களத்தில் கறைபடியாக பெயருக்கு சொந்தக்காரர் என்ற பெயர் பெற்றவர் முசிறி செல்வராஜ். அவரது சகோதரர் மகன் துரை செல்வமோகன் அ.ம.மு.க.வில் மாநிலப் பொறுப்பில் இருந்தார். சில வருடங்களுக்கு முன்பிருந்தே அக்கட்சியிலிருந்தும், அரசியலில் இருந்தும் விலகி இருந்துவருகிறார்.

இந்த நிலையில்தான் சமுதாய ரீதியாக முக்கியப் புள்ளிகளை குறி வைத்திருக்கும் த.வெ.க. தலைமை, முத்தரையர் சமுதாயத்தில் செல்வாக்காகவும், அதே சமயம் எந்தவொரு குற்றச்சாட்டிற்கும் ஆளாகாத துரை செல்வமோகனுக்கு த.வெ.க. தலைமை தூது விட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

MUST READ