Homeசெய்திகள்அரசியல்ஈழத்தமிழர்கள் ஏமாந்துவிட்டார்கள்... இலங்கையின் அதிர்ச்சி தேர்தல் முடிவு ! - வைகோ 

ஈழத்தமிழர்கள் ஏமாந்துவிட்டார்கள்… இலங்கையின் அதிர்ச்சி தேர்தல் முடிவு ! – வைகோ 

-

- Advertisement -

ஈழத்தமிழர்கள் ஏமாந்துவிட்டார்கள்! இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அதிர்ச்சியையும் கவலையையும் தருகின்றன என வைகோ தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்கள் ஏமாந்துவிட்டார்கள்... இலங்கையின் அதிர்ச்சி தேர்தல் முடிவு ! - வைகோ 

மிகக் கொடூரமான தமிழினப் படுகொலைக்கு ராஜபக்சே அரசு காரணம் என்றாலும், ஈழத்தமிழர் பிரச்சினையில் சிங்கள இனவாத வெறிகொண்ட ஜே.வி.பி. கட்சியினுடைய குரலாக, தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு வந்தவர்தான் இன்றைய அதிபர் அநுர குமார திசநாயகா.

அவரது கட்சியான தேசிய மக்கள் சக்தி கட்சி, ஜே.வி.பி.யினுடைய மறு பதிப்பாகும்.தொடக்கத்திலிருந்தே தமிழினத்தை அழிக்க வேண்டும் என்ற கொலைவெறி நோக்கம் கொண்டவர்தான் திசநாயகா.

இலங்கையில், நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 225 தொகுதிகளில், அவரது கட்சி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. தமிழர்கள் ஏமாந்துவிட்டார்கள்.

1987 இல் இந்திய – இலங்கை ஒப்பந்தம் போடப்பட்டபோது, தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கக் கூடாது என்றும், 13 ஆவது சட்டத் திருத்தத்தை ஏற்கக் கூடாது என்றும் சிங்கள இனவெறியினுடைய கருத்தாக தொடர்ந்து கூறிவந்தவர் திசநாயகா.

ஈழத்தமிழர்கள் ஏமாந்துவிட்டார்கள்... இலங்கையின் அதிர்ச்சி தேர்தல் முடிவு ! - வைகோ 

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தவரும் அவர்தான். சுனாமிப் பேரலை இலங்கையைத் தாக்கியபோது, தமிழர்களுக்கு எந்த நிவாரணமும் கொடுக்கக் கூடாது என்று பகிரங்கமாக கூச்சலிட்டவர்தான் திசநாயகா.

இந்திய அரசு தொடர்ந்து சிங்கள அரசையே ஆதரித்து வந்திருக்கின்ற நிலையை இனிமேல் மாற்றிக் கொள்ள வேண்டும். சிங்கள இராணுவம் தமிழர் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். சிறையில் அடைபட்டுள்ள தமிழர்கள் விடுவிக்கப்பட வேண்டும். தமிழினப் படுகொலையை நடத்திய சிங்கள அரசு மீது அனைத்துலக நாடுகளின் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இதற்கு முந்தைய அதிபர்கள் தமிழர்களுக்கு எதிராக கொடும் குற்றங்களை செய்திருந்தாலும், அவர்களைவிட சிங்கள வெறிபிடித்தவர்தான் இன்றைய அதிபர்.

அநுர குமார ‘ராஜ பக்சே2.0’-வா?: இலங்கைத் தமிழர்களுக்கு சிக்கல்?

MUST READ