Homeசெய்திகள்அரசியல்சீமானுக்கு எதிராக சுப.வீ வழக்கு!

சீமானுக்கு எதிராக சுப.வீ வழக்கு!

-

- Advertisement -

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாற்றி பாடிய விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பேசியவர்கள் தான் பிரபாகரனின் வாரிசுகளா? - சுப. வீரப்பாண்டியன்

சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டு திராவிட மாடல் தொடர் குறித்து சிறப்பு உரை ஆற்றினார். அப்போது சுப.வீரபாண்டியன் பேசியதாவது, அண்மையில் ஒரு கட்சியினர் திரைப்படத்திற்கு நடத்திய பாராட்டு விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடலை மாற்றி பாடியுள்ளனர். அப்பாடலில் வரும் தெக்கணமும், அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வாக்கியத்தை, தெக்கணமும், அதில் சிறந்த தமிழர்களின் திருநாடும் என்று மாற்றியுள்ளனர்.

திரைப்பட பாடல்களை மாற்றலாம், அதில் தவறு இல்லை. ஆனால் தமிழ்நாடு ஏற்றுகொண்டுள்ள பாடலை மாற்றக்கூடாது. எனவே அந்த கட்சியினருக்கு எதிராக தமது திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் வழக்க தொடர உள்ளேன் என்பதை இந்நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

 

தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றுவீர்கள் என்றால், இந்நிகழ்ச்சியின் இறுதியில் பாடப்பட உள்ள ஜனகன மன பாடலில் வரும் திராவிட என்ற வார்த்தையை உங்களால் மாற்ற இயலுமா?. ஆந்திர மாநிலம் குப்பத்தில் திராவிட பல்கலைக்கழகம் தொடங்கியபோது மத்திய அமைச்சர் முரளி மனோகர் அனுமதி வழங்காமல் தாமதம் செய்தார். இது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் கேட்டபோது, பல்கலைக்கழகத்தின் பெயரை தென்னிந்திய பல்கலைக்கழகம் என மாற்றினால் அனுமதி வழங்குவதாக கூறினார். அதற்கு பதில் அளித்த துணைவேந்தர் தேசிய கீதத்தில் உள்ள திராவிட என்ற வார்த்தையை உங்களால் நீக்க முடியாது என்றால், எங்களாலும் பல்கலைக் கழகத்தின் பெயரையும் மாற்ற முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார், இவ்வாறு அவர் கூறினார்.

 

MUST READ