Homeசெய்திகள்அரசியல்திமுக ஆட்சி மீது பகீர் குற்றச்சாட்டு... சீமான் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

திமுக ஆட்சி மீது பகீர் குற்றச்சாட்டு… சீமான் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

-

- Advertisement -

நடிகை விஜயலட்சுமியில் பாலியல் விவகாரம் தொடர்பாக நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனக்கெதிரான வழக்கு விசாரணைக்கு தடை கோரிய மேல்முறையீட்டு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக விஜயலட்சுமி அளித்த புகார் தொடர்பாக சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கை கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், “வழக்கின் விசாரணையை 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும்” என உத்தரவிட்டு சீமான் மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சீமான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.பி. நாகரத்தினா, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சீமான் தரப்பில், ”இந்த விவகாரத்தில் நான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளேன். நடிகை மூன்று முறை இதுவரை வழக்கை திரும்பப் பெற்றுள்ளார். முன்னதாக தடிகை விஜயலட்சுமியுடன் பழக்கம் இருந்தது, அதன் பின்னர் இருவரும் பிரிந்தோம். ஏற்கனவே எனக்கு எதிராக இதுபோன்று புகார் கொடுத்து விட்டு வழக்கை திரும்ப பெற்றார்.

ஆனால் 12 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் வழக்கு கொடுத்துள்ளார். இதற்கு முன்னர் 3 முறை வழக்கை திரும்ப பெற்றுள்ளார். புதிதாக அரசு பொறுப்பேற்றவுடன் அரசியல் காரணமாக இது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இது வேண்டுமென்றே குற்றம் சாட்டுவதாக செய்வதாக உள்ளது” என தெரிவிக்கப்பட்டது.

விசாரணையின் முடிவில், நீதிபதிகள் வழக்கின் விசாரணையை 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்ற அமர்வு இடைக்கால தடை விதித்தனர்.மேலும் சீமான் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் எதிர்மனுதாரர் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருதரப்புக்கும் இடையே கலந்து பேசி இழப்பீடு அடிப்படையில் முடிவு எட்டப்படுமா? என பார்க்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். ஆனால் எதிர்தரப்பு மனுதாரர் பாதிக்கப்பட்டுள்ளாரே , அதனை கருத்தில் கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கை மே மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.

MUST READ