Homeசெய்திகள்அரசியல்திருநெல்வேலியில் முதல்வர் : ரூ.6400 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறாா்

திருநெல்வேலியில் முதல்வர் : ரூ.6400 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறாா்

-

- Advertisement -

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை முதல் இரண்டு நாட்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு பயணம் மேற்கொள்கிறார். இதில், ரூ.6400 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.திருநெல்வேலியில் முதல்வர் மு.க. ஸ்டாலின்: ரூ.6400 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் தொடக்கம்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வு பயணத்தின்போது முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அந்த வகையில் நாளை முதல் 2 நாட்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் கள ஆய்வு பயணத்தை முதல்வர் மேற்கொள்ள இருக்கிறார்.இதன்படி காலை 11.20 மணிக்கு தூத்துக்குடிக்கு விமானத்தில் வரும் முதல்வர், அங்கிருந்து திருநெல்வேலிக்கு வருகிறார்.

திருநெல்வேலியில் கங்கைகொண்டான் சிப்காட்டில் சோலார் பவர் நிறுவனத்தை தொடங்கி வைத்துவிட்டு, உணவு பதப்படுத்தும் கூடத்தை திறந்து வைக்கிறார். மாலையில் திமுகவினரை சந்திக்கிறார். அத்துடன் பாளையங்கோட்டையில் கட்டப்பட்டுள்ள மார்க்கெட்டை திறந்து வைக்கிறார். அடுத்த நாள் 7-ம் தேதி காலையில் வெள்ளாங்குழியில் வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அங்கு விவசாயிகளை சந்தித்து பேசிவிட்டு, பாளையங்கோட்டையில் விழா நடைபெறும் மைதானத்தில் 30 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

மேலும் 20 ஆயிரம் பேருக்கு வீட்டுமனைகளை வழங்குகிறார்.  பின்னர் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.  முன்னதாக 7ம் தேதி காலை மாஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவர்கள் மற்றும் மீனவர்களை முதல்வர் சந்தித்து உரையாடுகிறார். மொத்தமாக 2 நாட்களிலும் மாவட்டத்தில் ரூ.6400 கோடி மதிப்பில் திட்டங்களை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

இந்துக்களும், முஸ்லிம்களும் ,சகோதரர்களாக வாழுகின்ற மாநிலம் தமிழ்நாடு – அமைச்சர் ரகுபதி

MUST READ