தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பூத் கமிட்டிகள் அமைப்பது தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் இன்றைய தினம் ஆலோசனை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பனையூரில் கூட்டம் நடைபெற்றது. அமைப்பு ரீதியாக 120 மாவட்டமாக பிரிக்கப்பட்டு 114 மாவட்ட செயலாளர்கள் இதுவரை அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கபடாமல் அனைவரும் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
கட்சியில் 70,000 பூத் கமிட்டி நிர்வாகிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்ட வாரியாக மாவட்ட செயலாளர் வாக்குச்சாவடி களுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்து, பட்டியல் தயார் செய்து பொதுச்செயலாளரிடம் இன்று ஒப்படைக்கின்றனர். இன்னும் பல மாவட்டங்களில் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் முழுமை பெறாமல் உள்ள நிலையில் அது குறித்தும் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கபட்டது.
பட்டியல்கள் அனைத்தும் தயார் செய்யபட்ட பின்னர் தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான பயிற்சி பட்டறையும், மாநாடும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பணிகள் அனைத்தும் நிறைவு பெற்ற பிறகு கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
காவல் காக்கும் வேலையைத்தானே மக்கள் என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் – முதல்வர் மு.க.ஸ்டாலின்