Homeசெய்திகள்அரசியல்பாஜக தலைவராக இருந்தபோது கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் மரியாதையுடன் நடந்திருக்கிறேன்- தமிழிசை

பாஜக தலைவராக இருந்தபோது கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் மரியாதையுடன் நடந்திருக்கிறேன்- தமிழிசை

-

- Advertisement -

பாஜக தலைவராக இருந்தபோது கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் மரியாதையுடன் நடந்திருக்கிறேன்- தமிழிசை

பா.ஜ.க கட்சி குறித்து தற்போதைய தலைவர்களிடம் கருத்து கேளுங்கள், என்னை இதில் இழுத்துவிடாதீர்கள் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், “ஒருநாளைக்கு 12 மணிநேரம் என வாரத்துக்கு 4 நாட்கள் பணியாற்றினால் தொழில் உற்பத்தி அதிகரிக்கும். கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 12 மணிநேர வேலை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் நலன் கருதியே 12 மணிநேர வேலை நீட்டிப்பு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதிக நேர வேலை, அதிக நேரம் ஓய்வு. மனித சக்தியை அதிகரிக்கும் என உலக அளவிலான ஆய்வில் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே 12 மணி நேர வேலை மனித சக்தியை அதிகரிக்கும்.

நான் பாஜக தலைவராக இருந்தபோது அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களிடமும் மரியாதையுடன் நடந்திருக்கிறேன். அனைவருக்கும் கருத்துக் கூற உரிமை உண்டு. அதனடிப்படையில் எடப்பாடி பழனிசாமி அவரது கருத்தை தெரிவித்து இருக்கிறார். பா.ஜ.க கட்சி குறித்து தற்போதைய தலைவர்களிடம் கருத்து கேளுங்கள். என்னை இதில் இழுத்துவிடாதீர்கள்” என்றார்.

 

MUST READ