- Advertisement -
பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள்?- தம்பிதுரை பதில்
பாஜக எத்தனை தொகுதிகள் வேண்டுமென்றாலும் கேட்கலாம், அதை முடிவு செய்ய வேண்டியது அதிமுகதான் என எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியின் சந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை எம்.பி. “உதயநிதி, சபரீசன் ரூ.30,000 கோடி சேர்த்துள்ளதாக பிடிஆர் ஆடியோ வெளியானது. இந்த ஊழல் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மவுனம் காப்பது சந்தேகத்தை எழுப்புகிறது. விடியா திமுக ஆட்சியில் மணல் மாஃபியாக்கள் கொடி கட்டி பறக்கின்றன.
பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் தர வேண்டும் என்று முடிவு செய்வது அதிமுகதான். கர்நாடகாவில் பாஜக கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது ஒரு துயரமான நிகழ்வு தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதை அதிமுக கண்டிக்கிறது” எனக் கூறினார்.