ஈபிஎஸ்- ஓபிஎஸ் இடையே நடந்து வந்த போர் முடிவிற்கு வந்தது
நீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வந்ததால் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் தேதி அறிவித்திருந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது.
அதில் ஓபிஎஸ் கட்சியை விட்டு நீக்கியது உள்ளிட்ட அதிமுக நிறைவேற்றிய அனைத்து தீர்மானங்களும் செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. மேலும் ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.
கடந்த சில மாதங்களாக அதிமுக வில் ஒற்றைத்தலைமை விவகாரம் பரவலாக பேசப்பட்டுவந்தது. அதனை தொடர்ந்து இடைக்கால பொதுச்செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி விரைவில் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் பொதுச் செயலாளருக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் பழனிசாமி போட்டியின்றி வேட்புமனு தாக்கல் செய்தார். நீதிமன்ற தீர்ப்பினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால் அவர் பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனாலும் ஈபிஎஸ்- ஓபிஎஸ் இடையே நடந்து வந்த போர் முடிவிற்கு வந்து விட்டதாகவே கூறவேண்டும்.