சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.இந்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு அரசியல் கட்சி தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அனைத்துக் கட்சி கூட்டம் முடிந்த பின் தலைவர்களின் கருத்துக்கள் பின்வருமாறு,
செல்வப்பெருந்தகை, ”நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி முழு மனதாக வரவேற்கிறது ஆதரிக்கிறது. முதலமைச்சர் எடுக்கின்ற தமிழ்நாடு நலன் சார்ந்த அனைத்து முடிவுகளுக்கும் காங்கிரஸ் கட்சி 100 சதவீதம் அவரோடு தோளோடு தோல் நின்று ஆதரிக்கும் என தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு தொகுதிகளை குறைக்க மாட்டோம் என்று சொல்கிறார். ஆனால் உத்திர பிரதேசம், பீஹார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தொகுதிகளில் கூட்டம் மாட்டோம் என்று சொல்லவில்லை என தெரிவித்தார். ஒரு கோட்டை அழிக்காமல் எப்படி ஒரு பெரிய கோட்டை போடுவார்களோ அதுபோன்று தமிழ்நாட்டை உரிமைகளை பறிப்பதற்காக தமிழ்நாடு நலன்களை அப்புறப்படுத்துவதற்காக வட மாநிலங்களில் உள்ள தொகுதிகளை உயர்த்துவதற்கு பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த குடும்ப கட்டுப்பாட்டை தமிழ்நாடு அரசு தான் முழுமையாக செயல்படுத்தியது. 2022 ஆம் ஆண்டு கூட குடும்பக்கட்டுப்பாட்டில் சிறந்த மாநிலம் என்று தமிழ்நாடு விருதும் பெற்றதுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரிக்கிறது வரவேற்கிறது. இன்னும் தென் மாநிலங்களைச் சார்ந்த பாஜக இல்லாத முதலமைச்சர்களை அழைத்து முதலமைச்சர் பேச வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். நாம் தமிழர், பாஜக, ஜி.கே.வாசன் கட்சி எதற்காக புறக்கணித்தார்கள் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்கு முடிவு கட்டுவார்கள்” என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.
பழ.நெடுமாறன், ”தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவின் எதிர்கால மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவின் ஜனநாயகமே ஒரு கேள்விக்குறியாக இருக்கக்கூடிய இந்தக் காலகட்டத்தில் இந்தக் கூட்டத்தை முதலமைச்சர் கூட்டியது பாராட்டத்தக்கது என தெரிவித்தார். இன்றைய அனைத்து கட்சி கூட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம்” என உலக தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளாா்.
வேல்முருகன், ” இன்றயை அனைத்துக் கட்சி கூட்டத்தில் நான் சில கருத்துகளை பதிவு செய்துள்ளேன். காவேரி, முல்லைப் பெரியாறு பிரச்சனை, ஏழ்வர் விடுதலை என வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை எல்லாம் குப்பையில் வீசுகின்றது. மத்திய பாஜக அரசிற்கு அனைத்து கட்சி கூட்டம் மூலமாக கொடுக்கும் தீர்மானங்களை மாநில உரிமைகளில் காலில் போட்டு நசுகிறது.
மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய ரயில்வே திட்டங்களிலிருந்து அனைத்து உரிமைகளையும் இருந்தும் தமிழகத்தை புறம் தள்ளுகிறது. புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு திணிக்கிறது. அனைத்துக் கட்சி கூட்டதத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதில் பயன் இல்லை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 848 இருக்கை உடன் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. வரும் காலங்களில் மத்திய அரசு மாட்டு சாணத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என சட்டம் போடுவார்கள். தொகுதி மறுவரையறை கொண்டு வந்தால் தமிழ்நாட்டில் 8 நாடாளுமன்ற தொகுதிகள் குறையும், கேரளாவில் 8 நாடாளுமன்ற தொகுதிகள் குறையும், மேற்கு வங்கத்தில் 4 நாடாளுமன்ற தொகுதிகள் குறையும் என ஊடகத்துறை மூலமாக சொல்கிறார்கள்.
அது உண்மை அதனால் தான் 848 இருக்கைகளோடு புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது இது ஏற்கனவே மத்திய அரசு முடிவு செய்துவிட்டது. தென்னிந்திய மாநில முதலமைச்சரங்களோடு ஒருங்கிணைந்து இந்ததொகுதி மறுவரையறை தடுத்து நிறுத்த வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டம் மூலமாக வலுயுறுத்தி உள்ளோம் என என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.
கி.வீரமணி, ” நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தெளிவான முடிவெடுத்து அனைத்து கட்சிகளையும் கூட்டி உள்ளார்.அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த கருத்தையே சொன்னார்கள். சிறு மாறுபட்ட கருத்து கூட இல்லாமல் ஏக மனதாக நிறைவேற்ற கூடிய அளவிற்கு தமிழ்நாடு திரண்டு இருப்பது சொன்னால் இதை முதலமைச்சருக்கு கிடைத்திருக்க கூடிய மிகப்பெரிய வெற்றி மட்டும் அல்ல தமிழ்நாடு மக்கள் எவ்வளவு கட்சிக்கு அப்பாற்பட்டு இந்த உணர்வுகளை பெற்றிருக்கிறார்கள் என்பதற்கு திராவிட மண் பெரியார் மண் நல்ல எடுத்துக்காட்டு என தெரிவித்தார்.
நாங்கள் வெளியேற எங்களுக்குள் ஆயிரம் மாறுபாடுகள் இருந்தாலும் அதே நேரத்தில் தமிழ்நாட்டு மக்கள் நலன் வருகின்ற பொழுது நாங்கள் அனைவரும் ஒரே குரலில் ஒருமித்தார் எங்கள் உரிமைகளை வலியுறுத்துவோம் என்று சொல்லி நல்ல உரிமை போர் ஒழுக்கம் வெற்றிகரமான முழக்கம் என திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளாா்.
தொல்.திருமாவளவன், ”மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை செய்தால் தமிழ்நாடு பாதிக்கப்படும் என இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளளது. தென்னிந்திய மாநிலங்களில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
விசிக சார்பாக இந்த எண்ணிக்கையை கூட்ட வேண்டாம் தக்க வைக்க வேண்டும் எனவும் நடைமுறையில் உள்ள 543 தொகுதிகளை தக்க வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம். மத்திய அரசு தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என நினைத்தில் சமச்சீரான எண்ணிக்கையில் உயர்த்தலாம் என ஆலோசனைகள் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவு தொகுதி எல்லை வரையறை முக்கியம். சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாநில அரசே உயர்த்தி கொள்ளலாம் என தீர்மானம் கொண்டு வரலாம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இப்போதையை நடைமுறையே பின்பற்ற வேண்டும் என்ற கருத்தையும் விசிக முன் வைத்துள்ளது.
எந்த விதத்திலும் பிரதிநிதித்துவத்தின் ஜனநாயகம் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்க கூடாது . மேலும் இன்றயை அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பங்கேற்று முதலமைச்சரின் முன் முயற்சிக்கு கருத்து தெரிவித்து இருப்பது பாராட்டுக்குரியது. வரலாற்று மிக்க இந்த கூட்டத்தை கூட்டிய முதலமைச்சருக்கு பாராட்டு. இந்த விஷயத்தில் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் . நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக அமித்ஷா பேசும் போது நாடாளுமன்ற எண்ணிக்கை குறையாது என பாஜக கூறியது ஏற்புடையது அல்ல. இந்த விவகாரத்தில் பாஜக தான் அரசியல் செய்து வருகிறது.
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக சொன்ன கருத்து அல்ல ஏற்கனவே அரசியல் வல்லூனர்கள் ஊடகத்தில் இதை பற்றி விவாதம் செய்து வருகிறார்கள். திமுக மட்டும் இதில் கற்பனை செய்து அரசியல் செய்யவில்லை. திமுக பேசுவதற்கு முன்னதாகவே ஒர் ஆண்டுக்கு முன்தாக விசிகவின் வெல்லும் ஜனநாயக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம், அதற்கு முன்பு நடைபெற்ற கட்சியின் உயர்மட்ட குழு தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை மூலமாக பாஜக தலைவர்கள் வட இந்திய மாநிலங்களில் தொகுதி எண்ணிக்கை உயரும் என பேசி உள்ளனர். மிக பொறுப்போடு முதல்வர் இந்த கூட்டத்தை கூட்டி உள்ளார். பாஜக அரசு தமிழகத்தில் குழப்பமான சுழலை ஏற்படுத்தி வருகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.
ஜெயகுமார், நாடாளுமன்ற தொகுதிகளை மறு சீரமைக்கும் மத்திய அரசின் நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் தலைமைச் செயலகம் வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், கழக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் இன்பதுரை ஆகியோர் கலந்து கொண்டு கருத்துகளை முன் வைத்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கழக அமைப்புச் செயலாளர் டி ஜெயக்குமார் பேசியதாவது, ”தொகுதிகளை மறுவரையறை செய்வதற்கு எவ்வித நிதியையும் ஒன்றிய அரசு இதுவரை ஒதுக்கவில்லை, நிதி ஒதுக்கிய பின்னர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தொகுதி மறு வரையறை செய்யும் பணி தொடங்கும் என்ற நிலையில் தற்போது எதற்காக இந்த அவசர கூட்டத்தை தமிழக அரசு ஊட்ட வேண்டும். தமிழகத்துக்கான அனைத்து உரிமைகளையும் தொடர்ந்து மத்திய அரசிடம் திமுக அரசு பறிகொடுத்து விட்டது. கச்சத்தீவு விவகாரம் முதல், நீட் தேர்வு வரை அனைத்து உரிமைகளையும் திமுக அரசு மத்திய அரசிடம் விட்டுக் கொடுத்து விட்டது.
தமிழக அரசு தற்போது கூட்டியுள்ள இந்த அனைத்து கட்சி கூட்டம் என்பது ஒரு நாடகம். தமிழகத்தின் உரிமையை திமுக தான் காக்குகிறது என்பது போல ஒரு மாயையை உருவாக்க இந்த அனைத்து கட்சி கூட்டத்தை திமுக அரசு பூட்டி இருக்கிறது. தமிழ்நாட்டில் தற்போதைய பிரதிநிதித்துவம் விகிதாச்சாரமான 7.18 விழுக்காடு என்பதற்கு குறையாமலும், தற்போது உள்ள 39 நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாமலும் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின்னரும் இருக்கும்படி நிர்ணயம் செய்தால் தான் மக்கள் தொகையை குறைத்த தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற முடிவை முன் வைத்துள்ளோம்.
தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தில், இரண்டு தீர்மானங்ளை மாற்றியமைக்க அறிவுறுத்தியும், அதனை தமிழக முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார் என தெரிவித்துள்ளாா்.
அன்புமணி ராமதாஸ், ” தொகுதி மறுசீரமைப்பு பற்றி அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்று கருத்துகளை பதிவு செய்தோம். அதில் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய அரசு கொள்கை முடிவோ அல்லது அறிவிப்போ வெளியிடவில்லை ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதியை குறைக்க மாட்டோம் என கூறியுள்ளாா்.
மத்திய அரசு இதனை தெளிவுப்படுத்த வேண்டும். இதில் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும் என கூறினார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொகுதி மறுவரையறை மேலும் 25 ஆண்டு காலம் நீட்டித்தார். இது அடுத்த ஆண்டு முடியும் தருவாயில் உள்ளது. மத்திய அரசு எதற்கு காத்துக்கொண்டுள்ளது என்றால் அடுத்தாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தால் தமிழ்நாட்டிற்கு இழப்பு ஏற்படும் என தெரிவித்தார்.
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை மூலம் தென்மாநிலங்களுக்கு 14 தொகுதிகள் தான் வரும் அதே வேலையில் வடமாநிலங்களில் 190 அதிகமான தொகுதி கிடைக்கும். அனைத்து மாநிலத்திற்கும் ஒரே மாறியாக அதிகப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளோம். 7.18 % கீழே செல்லக்கூடாது எனவும் ஒன்றாக இதை அணுக வேண்டும். மும்மொழி கொள்கைக்கும், சாதி வாரி கணக்கெடுப்பிற்கும் இதை போல அனைத்துக் கட்சி கூட்ட வேண்டும். பாஜக பங்கேற்காதது குறித்து அவர்கள் இடம் தான் கேட்க வேண்டும். மத்திய அரசு இந்த விஷயத்தை இன்னும் தெளிவுப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்பாடாத வகையில் தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.
தங்கம் தென்னரசு, ” தமிழ்நாட்டில் உள்ள விகிதாச்சாரம் 7.18 தொகுதி வரையறை விகிதம் கண்டிப்பாக நீடிக்க வேண்டும். இது குறித்து பிரதமர் உறுதி மொழி நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக எடுத்துக் கொடுக்கப்பட வேண்டும் என வலியுறித்துவோ. அரசியல் அமைப்பு சட்டத்திலும் அதற்குரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இந்த திருத்தங்களை கொண்டு வந்துள்ள தீர்மானத்தை வந்திருந்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் ஒருமனதாக வரவேற்று தீர்மானத்தை நிறைவேற்றியதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் நன்றி.
தொகுதி மறுவரையறை குறித்து கூட்டு நடவடிக்கை குழு அமைக்க பட உள்ளோம். முதலமைச்சர் அறிவித்த தீர்மானத்தில் ஆதரவு அனைத்து கட்சி தெரிவித்துள்ளார்கள் . இந்த கூட்டத்தில் 60க்கும் மேற்பட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதில் தெரிந்து கொள்ளலாம். இதில் அரசியல் செய்ய எதுவும் இல்லை, எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை. முழுக்க முழுக்க தமிழ்நாட்டின் நலன் சார்ந்து, மாநில உரிமைகளை காக்க இந்த தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது” என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருக்கிறாா்.
N.ஆனந்த், ” முன்னாள் பிரதமர் மாண்புமிகு இந்திராகாந்தி அம்மையார். 42ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம் 1976இல் இருந்து 2001 வரை தொகுதி மறுசீரமைப்பை நிறுத்தி வைத்தார். அதேபோல. 84ஆவது சட்டத் திருத்தத்தின் மூலம், முன்னாள் பிரதமர் மாண்புமிகு வாஜ்பாய் அவர்கள் 2001இல் இருந்து 2026 வரை மேலும் 25 ஆண்டுகளுக்கு இந்த மறுசீரமைப்பை நிறுத்தி வைத்தார்.
அப்போது அவர் சொன்ன காரணம். வட இந்தியாவை விடத் தென்னிந்தியாவில் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் தொகுதி மறுசீரமைப்பு செய்வது நியாயமாக இருக்காது என்பதே. அந்தக் காரணம் இப்போதும் அப்படியேதான் இருக்கிறது. எனவே, தொகுதி மறுசீரமைப்பு தேவையற்றது. இப்போது இருக்கும் 543 என்ற எண்ணிக்கையே தொடர வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு செய்வது தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களைப் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும். மத்திய அரசின் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைக் கடைப்பிடித்த மாநிலத்திற்கான தண்டனையே அன்றி வேறில்லை என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடாகும் என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளாா்.
ஜவஹருல்லா , ”நாடாளுன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைவரும் வரவேற்கக் கூடிய வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி சிறந்த முன்னெடுப்பை தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்துள்ளார்” என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹருல்லா தெரிவித்துள்ளாா்.
முத்தரசன், ”நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தில் சில கட்சிகளைத் தவிர பல கட்சிகள் கலந்து கொண்டுள்ளது சிறப்பான விஷயம். தமிழ்நாட்டினுடைய உரிமைகளின் நிலைநாட்டுவது, முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்தோம். எக்காரணத்தைக் கொண்டும் தற்பொழுது உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்துவிடக்கூடாது என்பது அனைத்து அரசியலுக்கு கட்சிகளும் ஒருமித்த குரல் எழுப்பியது பாராட்டக் கூடியது. மத்திய அரசு கூட்டு செய்து வெளிப்படை தன்மையில்லாமல் நயவஞ்சகமாக செயல்படுகிறது, பாஜகவின் சதித்திட்டம் இதில் உள்ளது.தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் முதல் அமைச்சரின் அழைப்பை ஏற்று கூட்டத்தில் பங்கேற்று முதலமைச்சர் எடுக்கும் நடவடிக்கைக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம் ” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
நெல்லை முபாரக் , ” முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டுடோம். மத்திய பாஜக அரசுக்கு எதிராக பேசும் மாநிலங்களின் குரலை நசுக்கிறது. தென்னிந்தியாவிற்கு ஆபத்து ஏற்படும் என்று தமிழ்நாடு அரசு இந்த கூட்டத்தை கூட்டி உள்ளது. பாஜக அரசின் நடவடிக்கைகளை தடுத்திட வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு எடுக்கக்கூடிய அத்தனை நடவடிக்கைகளையும் நாங்கள் எங்களுடைய ஆதரவை தெரிவிக்கிறோம். இதற்காக போராட வேண்டுமென்றாலும் போராட தயாராக உள்ளோம் ” என எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறியுள்ளாா்.
சண்முகம் , ”தமிழ்நாடு அரசு கூட்டி உள்ள இந்த கூட்டத்தை வரவேற்கிறோம். உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது வன்மையான கண்டனத்திற்குரியது. பாஜக ஆளும் கட்சி என்பதால் தன்னிச்சையாக முடிவெடுப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது. எக்காரணம் கொண்டும் தொகுதி குறைவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்காது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.
கருணாஸ், ”அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் ஒரு மனதாக இருந்தனர். அனைவரின் கருத்துகள் கேட்ட முதல்வரை வாழ்த்துகிறோம். தீர்மானத்தை வரவேற்கிறோம் மக்களிடம் கொண்டு செல்வோம் எனவும் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக அரசுக்கு உறுதியாக இருப்போம். ஏற்கனவே இருக்கும் நடைமுறையே பின்பற்றபட வேண்டும் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்ய கூடாது” என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்தார்.
எம்.பி-க்களின் எண்ணிக்கை குறைந்தால் தமிழ்நாட்டின் உரிமைக்குரல் நசுக்கப்படும்- வைகோ எச்சரிக்கை..!