தந்தை பெரியார் குறித்து இழிவாக பேசியதை ஈரோட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள். நிச்சயமாக அவர் ஈரோட்டில் நுழையவே முடியாது என தபெதிக பொதுசெயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறியுள்ளாா்.
பின்னர் செய்தியாளர் சந்திபில் அவர் கூறியது – ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் சந்திரகுமாரை தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆதரிக்கிறது. அவரது வெற்றிக்காக பாடுபடுவோம்.எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி மட்டும் இங்கு போட்டியிடுகிறது.
தொடர்ந்து சீமான் பெரியாரை இழிவுபடுத்தி பேசி வருகிறார். பேசிய கருத்துக்கு ஆதாரம் கொடுக்க கேட்டு அவர் வீட்டுக்கு சென்று இருந்தோம் ஆனால் இதுவரை 10 நாட்களுக்கு மேலாகியும் அதற்கான ஆதாரங்களை தரவில்லை. ஒரு கருத்தை சொன்னால் அதில் தெளிவாக அதற்கு ஆதாரத்தோடு பேச வேண்டும். ஆனால் பெரியாரை இழிவு படுத்தி கருத்தைச் சொல்லிவிட்டு அதற்கு ஆதாரத்தை கேட்டால் நீங்கள் தான் பூட்டி வைத்து இருக்கிறீர்கள் என சொல்கிறார்.
எதன் அடிப்படையில் அவர் பேசினார் என்பதை கேட்டால் அதற்கு பதில் இல்லை. தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டு செல்கிறார். சாதிவாரியாக கேள்விகளை பல தலைவர்களின் பெயர்களை சொல்லி கேட்கிறார். ஒரு தவறான கணக்கை சீமான் போடுகிறார் என்று அவர் கூறியுள்ளாா்.
ஈரோடு இடைத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கும் அதிமுக புள்ளி..! போன தடவை ஓபிஎஸ்… இந்த தடவை இபிஎஸ்…!