Homeசெய்திகள்அரசியல்அண்ணாமலைக்கு தங்க கடத்தலில் ஈடுபட்டவர் நெருக்கமானவர் - செல்வப்பெருந்தகை

அண்ணாமலைக்கு தங்க கடத்தலில் ஈடுபட்டவர் நெருக்கமானவர் – செல்வப்பெருந்தகை

-

சென்னை விமான நிலையத்தில்  தங்க கடத்தலில்  ஈடுபட்டவர் அண்ணாமலைக்கு நெருக்கமானர் என்று கூறப்படுதற்கு உரிய பதில் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்

 

 அண்ணாமலைக்கு தங்க கடத்தலில் ஈடுபட்டவர் நெருக்கமானவர் - செல்வப்பெருந்தகைசென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி உரையாற்றும் போது, இந்து மதத்தில் எந்த கடவுளும் வெறுப்பை விதைக்கவில்லை, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மட்டும் இந்துக்கள் அல்ல என்றும் தேசம் எல்லோருக்கும் பொதுவானது என்று பேசினார். ராகுல் காந்தி பேசியதை பா‌.ஜ.கவினர் திரிந்து கூறினார்கள்.

இந்து மதத்தின் பெயரை சொல்லி பா.ஜ.கவினர் வியாபாரம் செய்வதாகவும், இந்துக்களிடம் பிரிவினையை தூண்டலாம் என்று மோடி நினைப்பதாகவும், பா.ஜ.கவினர் இந்து மதத்தை சிதைப்பவர்கள் என்று அவர் கூறினார்

இந்துக்களின் (சபரிமலை, ஸ்ரீரங்கம்) கோயிலில் இந்து, இஸ்லாம் இடையை எவ்வளவு ஒற்றுமை இருந்தது என்று கல்வெட்டு உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் சமஸ்தானத்திற்கு உட்பட்ட இந்து கோயிலில் பச்சை நிறம், மஞ்சள் நிறத்தில் என இரு உண்டியல் உள்ளது. மஞ்சலில் இந்துக்கள், பச்சை நிறத்தில் இஸ்லாமியர்கள் உண்டியல் செலுத்துவார்கள்,  மத வெறியால் ஆட்சியை பிடிக்கலாம் என ஒரு கும்பல் உள்ளது என்றார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலராக அமைச்சர் பழனிவேல் தியாகாரஜன், அம்மா நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் பூவும், பொட்டுமாக இல்லையென நீதிமன்றத்தில் பாஜகவினர் வழக்கு தொடுத்து உள்ளனர். இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ்  கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதோடு, இதுபோன்ற போக்கை கைவிட வேண்டும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நடக்கும் ஆட்சிக்கும் மதிப்பு அளிக்காமல், ஜனநாயகக் விரோத போக்கை கடைபிடிக்கவில்லை என்றும்  அண்ணா பல்கலைக்கழகத்தில்  அமைச்சர் இல்லாமல் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்கிறார், இதனை வன்மையாக கண்டிப்பதாக கூறினார்.

பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின், நண்பர் சென்னை விமான நிலையத்தில் 267 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்பில் உள்ளதாக செய்திகள் வருகின்றன. இதற்கு அண்ணாமலை பதிலளிக்க வேண்டும். இதுகுறித்து, சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை விசாரிக்க வேண்டும் என்றார்

 அண்ணாமலைக்கு தங்க கடத்தலில் ஈடுபட்டவர் நெருக்கமானவர் - செல்வப்பெருந்தகைபா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளிநாட்டு படிப்பிற்கு செல்கிறாரே என்ற கேள்விக்கு,  கிராமத்தில் ஒரு பழமொழி ஒன்று சொல்வார்கள். கூரை ஏறிகோழி பிடிக்க தெரியாதவர், வானம் ஏறி வைகுண்டம் செல்ல போகிறார் இவ்வாறு அவர் கூறினார்.

MUST READ