விஜய் மாநாடு நடந்த காலையில் கூட வாழ்த்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திடீரென விஜய் அரசியலை கொள்கைகளை பற்றி கடுமையாக விமர்சித்து வெடிக்கிறார். இரு தினங்களாக மீடியாக்களின் சீமானின் முழக்கமே ஒலித்து வருகிறது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன், விஜய் நடித்த கோட் படத்தின் கதையை வைத்து சீமானுக்கும் விஜய்க்கும் ஏற்பட்ட மோதலை விளக்கியுள்ளார். ‘‘தான் ஆசையாய் வளர்த்த பிள்ளை காணாமல் போகிறது. அதனால் குடும்பத்திற்குள் குழப்பம் வருகிறது. 20 ஆண்டுகள் கழித்து காணாமல் போன மகன் கிடைக்கிறான். மகிழ்ச்சியில் குடும்பமே கொண்டாடுகிறது.
ஆனால் வந்தவன் ஆளே மாறி வந்திருக்கிறான் என்பது போகப் போகப் தெரிகிறது. அவனை இயக்குகிறவன் தவறான கதைகளை சொல்லி தன் குடும்பத்திற்கு எதிராகவே அவனை வளர்த்துள்ளான் என்பது அப்பாவிற்கு தெரியவர, அப்பா அவனை போட்டுத் தள்ளுகிறார் !
நடிகர் விஜய்யின் கோட் படத்தில் தன் மகனை தவறானவன் என தெரிந்தவுடன் விஜய் எப்படி பொளந்தாரோ அப்படித்தான். நிஜத்தில் தம்பியாக நினைத்தவர் தவறான அரசியலை கையிலெடுத்தவுடன் அண்ணன் சீமானும் பொளக்கிறார் ’’ என நாம் தமிழர் சாட்டை துரைமுருகன் கூறியுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாரி சாலன், ‘‘அந்தப் படத்தில் இந்தப் பெண்ணின் கதாபாத்திரம் தான் மிகவும் பாவம் சட்டை துரைமுருகன், வருபவன் யார் என்றே தெரியாமல் அவசர அவசரமாக கெட்டவனை காதலித்து, கடைசியில் இந்தப் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவார்கள். இந்தக் கதாபாத்திரம் உணர்த்துவது ஒன்றுதான் – அவசர அவசரமாக எதையும் செய்யக்கூடாது. அவசர அரசியல்= அபத்த அரசியல்’’ எனத் தெரிவித்துள்ளார்.