Homeசெய்திகள்அரசியல்தொண்டர்களின் எண்ணம் ஈடேறவேண்டும்: தர்மயுத்தம் தொடரும் -ஓ.பன்னீர்செல்வம்

தொண்டர்களின் எண்ணம் ஈடேறவேண்டும்: தர்மயுத்தம் தொடரும் -ஓ.பன்னீர்செல்வம்

-

- Advertisement -

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளியொட்டி அவரது சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளாா். தொண்டர்களின் எண்ணம் ஈடேறவேண்டும்: தர்மயுத்தம் தொடரும் -ஓ.பன்னீர்செல்வம்முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழாவையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் நம்பிக்கை துரோகம், சூது, சூழ்ச்சி யாரால் அரங்கேற்றப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் தோல்வி ஏற்பட்டுள்ளது. ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பிடிவாதமே தோல்விகளுக்கு வித்திட்டது. அதிமுக ஓரணியில் ஒன்றிணைய வேண்டும் என்பதே தொண்டர்களின் கூற்று. மனசாட்சி இல்லாமல் பேசுபவர்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம். தமிழ்நாடு மக்களும், எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இருமொழிக் கொள்கையையே ஆதரித்தனர். தொண்டர்களின் எண்ணம் ஈடேறவேண்டும் என்றுதான் இன்னும் தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளாா்.

சென்னை T- நகரில் உள்ள முதல்வர் மருந்தகத்தை நேரில் பார்வை –  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

MUST READ