பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு வலுக்கும் எதிர்ப்பு அரசியல் முதிர்ச்சி இல்லாத கன்னடிகா அண்ணாமலைக்கு எதிராக ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்குறி என்று விமர்சித்ததால் அதிமுகவினர் அண்ணாமலை பேனர் கிழிப்பது, கொடும்பாவி எரிப்பு, ஆட்டுக்குட்டிக்கு முகமூடி அணிவிப்பது என விதவிதமான போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை பகுதிகளில் வடசென்னை அதிமுக மாவட்ட செயலாளர் ராஜேஷ் அண்ணாமலையை அரசியல் முதிர்ச்சி இல்லாத கன்னடிகா என்று அச்சிட்டு ஆட்டுக்குட்டியை தோளில் சுமக்கும் பண்டார வேஷத்தில் அண்ணாமலை புகைப்படம் போட்டு போஸ்டர் ஒட்டி உள்ளார்.
அதிமுகவையும் எடப்பாடி பழனிச்சாமையும் தொடர்ந்து விமர்சித்து வரும் அண்ணாமலையை விமர்சிக்கும் வகையில் அவர் கன்னடர் என்பதை விளக்கும் வகையில் கன்னடிகா என்று விமர்சனம் செய்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.