Homeசெய்திகள்அரசியல்உங்கள் யூகங்களுக்கும், கற்பனைகளுக்கு தேமுதிக கிடையாது  - பிரேமலதா விஜயகாந்த் சீற்றம்

உங்கள் யூகங்களுக்கும், கற்பனைகளுக்கு தேமுதிக கிடையாது  – பிரேமலதா விஜயகாந்த் சீற்றம்

-

- Advertisement -

அதிமுக – பாஜக சந்திப்பு குறித்து எங்களிடம் யாரும் கலந்தாலோசிக்கவில்லை, நாங்களும் யாருடனும் பேசவில்லை. இந்த முறை மிகவும் யோசித்து நிதானமாக முடிவு எடுக்கிறோம்,  உங்கள் யூகங்களுக்கும், உங்கள் கற்பனைகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்துள்ளாா்.உங்கள் யூகங்களுக்கும், கற்பனைகளுக்கு தேமுதிக கிடையாது  - பிரேமலதா விஜயகாந்த் சீற்றம்சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பொதுமக்களுக்கு அன்னதான உணவுகளை வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது,

தமிழகத்தின் அரசியல் சூழல் சூரியன் வெப்பம் போல் உள்ளது என தெரிவித்தார். அதிமுக – பாஜக கூட்டணி உறுதியானது குறித்தான கேள்விக்கு, அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது என்பதை  தொலைக்காட்சியில் நானும் பார்த்தேன். அது அந்த இரண்டு கட்சியும் சேர்ந்து எடுத்த முடிவு எனவும் அதை பற்றி இப்போதைக்கு ஏதும் சொல்ல முடியாது எனவும் தெரிவித்தார்.

இன்றயை தினம் கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. குறிப்பாக வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதி தருமபுரியில் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடத்த இருக்கிறோம். அதற்காக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.  அதற்காக தான் துணை செயலாளர்கள் மற்றும் அவை தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் வந்திருக்கிறார்கள் நீங்கள் நினைத்தது போல் அல்ல என தெரிவித்தார்.

தற்போதைக்கு எங்கள் கட்சி வளர்ச்சியின் பணிகளில் மட்டும் முழுமூச்சாக வேலைகளை செய்து வருகிறோம். 30ஆம் தேதி செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற பிறகு யாருக்கு எல்லாம் முக்கிய பதவி என்பது குறித்து அறிவிப்புகள் வெளியாகும். அதன் பிறகு முக்கியமான செய்திகளை அறிவிக்க இருக்கிறோம்.

தொடர்ந்து கட்சி பணிகளை செய்ய இருக்கிறோம். ஆறு மாத காலம் தேமுதிக கட்சி வளர்ச்சிக்காகவும், கட்சி பணிகளையும், பூத் கமிட்டி அமைப்பது, தொண்டர்களை சந்திப்பது என பணிகள் நடைபெற உள்ளது.  உங்கள் யூகங்களுக்கும் உங்கள் கற்பனைகளுக்கு தேமுதிக கிடையாது  என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  இன்னும் ஒரு வருடம் இருக்கிறது தேர்தலுக்கு. அதனால் நாங்கள் இந்த முறை மிகவும் யோசித்து நிதானமாக முடிவு எடுக்கிறோம் என தெரிவித்தார்.

பாஜகவிடம் அதிமுக பணிந்ததா என்ற கேள்விக்கு, பாஜக தலைவர்கள்,  அதிமுக அண்ணன் எடப்பாடி இடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னை கேட்கிறீர்கள் என கூறினார். தேமுதிக குறித்து தலைமைக் கழகத்தில்  அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது மட்டும்தான் உண்மை செய்தி எனவும் தவறான தகவலை யாரும் பரப்ப வேண்டாம் என்ற வேண்டுகோளை வைக்கிறேன் எனவும் கேட்டுக்கொண்டார்.

பாஜக மாநில தலைவர் மாற்றம் அந்த கட்சியின் முடிவு மேலும் புதிதாக மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நயினார் நாகேந்திரனுக்கு தேமுதிக சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

பெண்களை பற்றி பொதுவெளியில் அமைச்சர் பொன்முடி பேசியது குறித்தான கேள்விக்கு, பொன்முடி பேச்சை கேவலமாகவும், அசிங்கமாகவும் பார்க்கிறேன். முதலமைச்சர் வலுவான  நடவடிக்கை எடுத்திருக்கிறார். மேலும் இதைப் பற்றி பேச விரும்பவில்லை அந்த கொச்சையான வார்த்தை பற்றி பேச விரும்பவில்லை என தெரிவித்தார்.

பாஜகவோடு கூட்டணி வைத்தன் மூலம் தமிழக மக்களுக்கு அதிமுக தூரோகம் செய்து விட்டார்கள் என்ற கனிமொழி பேசியது குறித்தான கேள்விக்கு, அதை பற்றி கனிமொழியிடம் கேட்க வேண்டிய கேள்வி என்னிடம் கேட்கிறீர்கள் என கூறினார்.

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அரசியல் நகர்வு மாறிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அனைத்து கட்சியும் குழப்பத்தோடு ஓடிக்கொண்டிருக்கிறது. பாமகவில் அப்பா மகன் இடையே பிரச்சனை போய் கொண்டு இருக்கிறது. பாஜகவில் மாநில தலைவர் மாற்றப்பட்டு இருக்கீறார்கள். அதிமுகவிலும் பிரச்சனை போய் கொண்டு இருக்கிறது என தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்திருந்தீர்கள் இப்போதும் அதிமுக கூட்டணியில் உள்ளீர்களா என்றும் கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் அதிமுக உங்களிடம் ஏதாவது ஆலோசித்ததா என்ற கேள்விக்கு, நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணியில் இருந்தோம். தற்போது தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலம் இருக்கிறது. எந்த கூட்டணி போகிறோம்,  யாருடன் கூட்டணி போறோம் என்பதை பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை. எங்களிடம் யாரும் கலந்து ஆலோசிக்கவில்லை, நாங்களும் யாருடனும் பேசவில்லை இப்போதே எதுவும் சொல்லி விட முடியாது என தெரிவித்துள்ளாா்.

2026 தேர்தலில் சந்தர்ப்பவாத கூட்டணி படுதோல்வி அடைவது நிச்சயம் – செல்வ பெருந்தகை விமா்சனம்

MUST READ