Homeசெய்திகள்அரசியல்வாரிசு வாரிசு என்று பேசுகிறார்கள்… எங்களுக்கு இருப்பதால் வாரிசு என்கிறோம்- மு.க.ஸ்டாலின்

வாரிசு வாரிசு என்று பேசுகிறார்கள்… எங்களுக்கு இருப்பதால் வாரிசு என்கிறோம்- மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

”வாரிசு வாரிசு என்று பலர் பேசலாம். ஆனால், வாரிசு நமக்கு இருக்கிறது. அதனால் வாரிசு என்று சொல்கிறோம்” என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ் புதல்வன் திட்டம் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி முதல் தொடங்கப்படும்
சென்னை கொளத்தூரில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், ”கட்சியினர் உங்கள் குடும்பம், எங்கள் குடும்பம் என பிரிக்க வேண்டாம். நாம் அனைவரும் ஒரே குடும்பம். அண்ணா அனைவரையும் தம்பி தம்பி என அழைப்பார். கலைஞர் அவர்கள் அனைவரையும் உடன்பிறப்பே என அழைப்பாளர்கள். இந்த இயக்கத்தை ஒரு குடும்ப பாச உணர்வோடு உருவாக்கி உள்ளார்கள்.

இன்றைக்கு பலர் வாரிசு வாரிசு என கூறுகிறார்கள். நமக்கு வாரிசு இருக்கிறது. அதனால் வாரிசுகள் என்று சொல்கிறோம். அதனால் தான் நமது குடும்ப விழாவில் பங்கேற்று உள்ளேன். முரளிதரன் படிப்படியாக பணியாற்றி தான் பகுதி செயலாளராக வந்துள்ளார். 16 ஆண்டுகள் பணியாற்றி வருகிறார். அவர் உழைப்பிற்கும், விசுவாசத்திற்கும்தான் நான் இங்கு வந்துள்ளேன். திமுக வரலாற்றில் இன்றும் பலர் இணைத்து கொண்டு பணியாற்றி வருகிறார்கள்.

கொளத்தூர் தொகுதியில் நான் சட்டமன்ற உறுப்பினராக நிறுத்தப்பட்ட போது எனக்கு உறுதுணையாக இருந்தவர். அவரிடம் தொகுதி பற்றி கேட்கும் போது நீங்கள் தொகுதிக்கே வர வேண்டாம். நீங்கள் வீட்டிலே இருங்கள் நாங்கள் வெற்றி பெற வைக்கிறோம் என கூறுவார். ஆனால் சொல்லிவிட்டு அந்த தெரு வாருங்கள் இந்த தெரு வாருங்கள் என கூறுவார்.அது வேறு என தெரிவிப்பார்.

முதலமைச்சர் குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க கொடைக்கானல் சென்றார்

தொகுதி மறுசீர்மைப்பு என வரும் போது நாடாளுமன்ற தொகுதி குறைக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் அதிகம் பெற்று இருக்கலாம். நம்மளை விட அதிகம் பெற கூடிய திறமை யாருக்கும் எந்த மாநிலத்திற்கும் கிடைக்காது. ஏன் என்றால் நாம் எல்லாம் தமிழர்கள். அதனால் தான் மும்மொழி கொள்கை ஏற்றுக்கொள்ள முடியாது இரு மொழி கொள்கை தான் எங்களுக்கு வேண்டும் என கேட்ட்கும் ஆற்றல் உள்ளது. 5 ஆயிரம் இல்லை 10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் மும்மொழியை ஏற்றுக்கொள்ள மாட்டோம் அதில் கையெழுத்து போட மாட்டோம் என சொல்லி உள்ளேன்” எனத் தெரிவித்தார்.

 

MUST READ