Homeசெய்திகள்அரசியல்நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 3-ம் கட்ட வாக்குப்பதிவு

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 3-ம் கட்ட வாக்குப்பதிவு

-

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 3-ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

நாடு முழுவதும் மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ளே 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 3-ம் கட்ட வாக்குப்பதிவு

இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

 

இந்நிலையில் குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று 3-ஆம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகின்றது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 3-ம் கட்ட வாக்குப்பதிவு

அசாம் மாநிலத்தில் 4, பிஹார் 5, சத்தீஸ்கர் 7, தத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ யூனியன் பிரதேசங்கள் 2, கோவா 2, குஜராத் 25,கர்நாடகா 14, மத்திய பிரதேசம் 9, மகாராஷ்டிரா 11, உத்தர பிரதேசம் 10,மேற்கு வங்கம் 4 ஆகிய தொகுதிகளில் 3-ம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது.

https://www.apcnewstamil.com/news/politics/phase-3-lok-sabha-elections/83241

3-ம் கட்ட தேர்தலில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜோதிர் ஆதித்ய சிந்தியா மற்றும் டிம்பிள் யாதவ், சிவராஜ் சிங் சவுகான், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திக்விஜய் சிங், சுப்ரியா சுலே என 1,352 முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

 

3-ம் கட்ட மக்களவை தேர்தலுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

MUST READ