திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் தயார் செய்த நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் 11 நாட்கள் விரதம் – புதிய நாடகத்தை தொடங்கியுள்ளார்.
ஆந்திர மாநில துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தனது எக்ஸ் பக்கத்தில் ஏழுமலையானே என்னை மன்னிக்கவும். புனிதமாக கருதப்படும் உனது பிரசாத லட்டு தயாரிக்கப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்ட நிலையில்
11 நாட்கள் பரிகார விரதம் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த ஆட்சியாளர்களின் கேடுகெட்ட மனப்போக்கால் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது. எதையும் செய்யும் மனம் கொண்டவர்கள் மட்டுமே இத்தகைய பாவத்தை செய்ய முடியும். இந்தப் பாவத்தை ஆரம்பத்திலேயே கண்டு பிடிக்க முடியாமல் போனது இந்து இனத்தின் மீதான கறை. லட்டு பிரசாதத்தில் மிருக கொழுப்பு இருந்ததை அறிந்த நொடியில் எனது மனம் உடைந்ததாக பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
மக்கள் நலனுக்காகப் போராடி வரும் நான், இதுபோன்ற பிரச்னைகள் ஆரம்பத்தில் என் கவனத்துக்கு வராதது வேதனை அளிக்கிறது. கலியுகத்தின் கடவுளான ஏழுமலையானுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு சனாதன தர்மத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் பரிகாரம் செய்ய வேண்டும். அதன் ஒரு பகுதியாக நான் ஒரு தீட்ச்சை செய்ய முடிவு செய்துள்ளேன். நாளை காலை, குண்டூர் மாவட்டம், நம்பூரில் உள்ள ஸ்ரீ தசாவதார வெங்கடேஸ்வர சாமி கோயிலில் நான் தீட்சை விரதம் தொடங்க உள்ளேன். 11 நாட்கள் விரத தீட்சைக்கு பிறகு ஏழுமலையானை வழிபாடு செய்ய உள்ளேன். கடவுளே… கடந்த ஆட்சியாளர்கள் உனக்கு எதிராக செய்த பாவங்களைக் கழுவும் சக்தியை எனக்குக் கொடுங்கள்’ என்று மன்றாடுகிறேன்.
கடவுள் நம்பிக்கையும், பாவ பயமும் இல்லாதவர்களே இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். திருமலை திருப்பதி தேவஸ்தான அமைப்பில் அங்கம் வகிக்கும் நிர்வாகக் குழு உறுப்பினர்களும், ஊழியர்களும் கூட அங்குள்ள தவறுகளை கண்டு பிடிக்க முடியாமல், கண்டு பிடித்தாலும் பேசவில்லை என்பதுதான் என் வேதனை. அன்றைய ஆட்சியாளர்களுக்கு அவர்கள் பயந்ததாகத் தெரிகிறது. கலியுக
வைகுண்டம் என்று கருதப்படும் திருமலையின் புனிதம், சமயக் கடமைகளை இழிவுபடுத்தும் செயல்களைச் செய்த கடந்த ஆட்சியாளர்களின் நடத்தை இந்து தர்மத்தைப் பின்பற்றும் அனைவரையும் காயப்படுத்தியுள்ளது. மேலும் லட்டு பிரசாதம் தயாரிப்பில் விலங்கு கொழுப்பு அடங்கிய நெய் பயன்படுத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இவ்வாறு பவன் கல்யாண் அறிவித்துள்ளார். இது புதிய அரசியல் நாடகம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர