Homeசெய்திகள்அரசியல்மதிமுகவிலிருந்து விலகும் திருப்பூர் துரைசாமி

மதிமுகவிலிருந்து விலகும் திருப்பூர் துரைசாமி

-

மதிமுகவிலிருந்து விலகும் திருப்பூர் துரைசாமி

மதிமுக கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, அக்கட்சியிலிருந்து முழுவையாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

Image

மதிமுகவை திமுகவுடன் இணைத்துவிடலாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு அக்கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியிருந்தார். அதில், “மதிமுகவை தாய் கட்சியான திமுகவுடன் இணைத்து விடுவது சமகால அரசியலுக்கு சாலச்சிறந்தது. மகனை ஆதரித்து அரவணைப்பதும், சந்தர்ப்பவாத அரசியலும் மக்களை எள்ளி நகையாட வைத்துவிட்டது. 30 ஆண்டுகளாக உணர்ச்சிமிக்க தங்களது பேச்சை நம்பி வாழ்க்கையை இழந்த தோழர்களை மேலும் ஏமாற்றாதீர்.

எந்த வைகோ குடும்ப அரசியலை எதிர்த்து பேசினாரோ, அதே வைகோவின் செயல்பாடு குடும்ப அரசியலை ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறது. மதிமுகவின் சட்ட விதிகளுக்கு எதிராக அவர் செயல்பட்டிருக்கிறார். இன்னும் வைகோவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் குற்றச்சாட்டுகள் உள்ளன. இனிமேலும் மதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை என்பதால் திமுகவுடன் இணைத்துவிடுவது நல்லது என்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தார்.

துரைசாமி

மதிமுகவை திமுகவுடன் இணைக்க வைகோ மறுப்பு தெரிவித்ததால், அதிருப்தி அடைந்த மதிமுக மாநில அவைத் தலைவர் துரைசாமி மதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருக்கிறார். வைகோ வாரிசு அரசியல் செய்வதாக துரைசாமி குற்றஞ்சாட்டியது குறிப்பிடதக்கது.

MUST READ