Homeசெய்திகள்அரசியல்அண்ணாமலை வெளியிடும் ஊழல் பட்டியலுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம் - டிகேஎஸ் இளங்கோவன்

அண்ணாமலை வெளியிடும் ஊழல் பட்டியலுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம் – டிகேஎஸ் இளங்கோவன்

-

அண்ணாமலை வெளியிடும் ஊழல் பட்டியலுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம் – டிகேஎஸ் இளங்கோவன்

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்பதை எடப்பாடி பழனிசாமி புரிந்து கொள்ள வேண்டும் என திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

அண்ணாமலை எல்லா கிரிமினல்களையும் பாஜகவில் சேர்த்து கொண்டிருக்கிறார்..பங்கமாக  கலாய்த்த டி.கே.எஸ். இளங்கோவன்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.எஸ். இளங்கோவன், நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெறும் என்ற எடப்பாடி பழனிச்சாமி கருத்துக்கு பதில் அளித்தார். அப்போது, “தன்னிடம் உள்ள ஆதரவாளர்களை தக்க வைப்பதற்காகவும், அதிமுக ஓ. பன்னீர் செல்வத்திடம் செல்லாமல் இருப்பதற்காகவுமே மீண்டும் முதலமைச்சர் ஆவேன் என பழனிசாமி பேசி வருகிறார். ஒரே நடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லை. நாடாளுமன்ற தேர்தல் நடக்கும்போது கர்நாடக மாநிலத்திற்கும் சட்டமன்றத் தேர்தலை நடத்த, பிரதமர் மோடியிடம் எடப்பாடி வலியுறுத்த வேண்டும்

எடப்பாடி பழனிச்சாமிக்கு சட்டமே தெரியவில்லை. நாங்களாகவே திமுக ஆட்சியை கலைத்துக் கொண்டால்தான் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வரும்” என்றார்.

திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிடுவேன் என்ற அண்ணமலையின் பேச்சிற்கு பதில் கூறிய டி.கே.எஸ். இளங்கோவன், அண்ணாமலை வெளியிடும் பட்டியலுக்காக காத்திருப்பதாகவும், முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

MUST READ