Homeசெய்திகள்அரசியல்டிரம்பின் ஆணவ சர்வாதிகாரம்... உதவிகளை நிறுத்த அமெரிக்கா திட்ட வட்டம்..!

டிரம்பின் ஆணவ சர்வாதிகாரம்… உதவிகளை நிறுத்த அமெரிக்கா திட்ட வட்டம்..!

-

- Advertisement -

அமெரிக்கா அதிபர் மாளிகையான வரலாற்று சிறப்புமிக்க வெள்ளை மாளிகை’இன்று வெளிநாட்டு பிரமுகர்களை சந்திக்கும் ஏற்பாடுகளுடன் வழக்கமான ஒரு நாளாகத்தான் தொடங்கியது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் வழக்கப்படி வாயிலில் மரியாதையுடன் வரவேற்றார்.

அரை மணி நேர கண்ணியமான பேச்சுவார்த்தைக்கு பிறகு நிலைமை மாறத் தொடங்கியது. அன்பான சூழ்நிலை கோபமாகவும் குழப்பமாகவும் மாறியது. உரத்த குரல்களையும் கோபம் கொப்பளிக்கும் கண்களையும் எதிர்பார்ப்புகளுடன் இருந்த முகத்தையும் உலக தொலைக் காட்சிகளின் கேமராக்கள் படம் பிடித்தன. இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

பத்திரிகையாளர்கள் இந்த ஒரு அசாதாரண நிகழ்வை தொடர்ந்து அதிர்ச்சி மேலிட கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். அமெரிக்காவுக்கான உக்ரைன் பெண் தூதரின் நிலைமையோ தர்ம சங்கடம். தலையில் கை வைத்த படி அமர்ந்துவிட்டார்.

ஒரு கட்டத்தில் மிகவும் பொறுமை இழந்த ஜெலன்ஸ்கி, “நான் மிகவும் உறுதியுடன் இருக்கிறேன் அதிபர் அவர்களே! நான் போரில் ஈடுபட்டுள்ள ஒரு நாட்டின் அதிபர்” என்றார். அதற்குப் பதிலடி கொடுத்த டிரம்ப் “நீங்கள் மூன்றாம் உலகப் போர் உருவாகும் நெருக்கடி உடன் விளையாடுகிறீர்கள்” என்றார். தொடர்ந்து மோதல் பேச்சு நீடித்தது. இதுவரை இப்படி ஒரு காட்சி வெள்ளை வெள்ளை மாளிகையில் கண்டதே இல்லை என செய்தியாளர்கள் வியந்தனர்.

டிரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் “ஜெலன்ஸ்கி அமைதிக்கு தயாராக இருக்கும்போது திரும்பி வரலாம்” என்று பதிவிட்டிருந்தார். செய்தியாளர் சந்திப்பு மற்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும் நிகழ்வு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டது . சிறிது நேரத்தில் கிரைன் அதிபர் வெளியே வந்து அங்கு காத்திருந்த காரில் ஏறி புறப்பட்டு சென்று விட்டார். பெண் தூதரும் அவரை பின்தொடர்ந்தார்.

அதைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் அமெரிக்கா இனி உக்ரைனுக்குஇனி எந்த உதவியும் வழங்காது என்று அறிவித்தார். ஏனென்றால் அவர்களின் முன்னுரிமை அமைதி பேச்சு வார்த்தைகள் ஆகும். ஜெலன்ஸ்கி வருகையின் போது ஏற்பட்ட சர்ச்சைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

“உண்மையான நீடித்த அமைதி இல்லாமல் மிகத் தொலைதூர நாட்டில் ஒரு போருக்கான வெற்றுக் காசோலைகளை நாங்கள் இனி எழுதப்போவதில்லை” என்று லீவிட் கூறினார்.

“இந்த பேச்சு வார்த்தைகளில் அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது குழுவினர் மூடிய கதவுகளுக்கு பின்னால் என்ன செய்கிறார்கள் என்பது அமெரிக்க மக்களும் முழு உலகமும் பார்க்க முடிந்ததால் கேமராக்கள் சுழன்று கொண்டிருந்தன” என்று அவர் மேலும் கூறினார்.

 

MUST READ