- Advertisement -
அதிமுக ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிடாதது ஏன்?- டிடிவி தினகரன்
அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சையில் உள்ள அவரது திருவுருப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய டிடிவி தினகரன், “அண்ணாமலை வெளியிடும் ஊழல் பட்டியல் என்ன அதிர்வலையை ஏற்படுத்தும் என பொறுத்து இருந்து பார்ப்போம். இது உண்மையா – இல்லையா என்று அமைச்சர்கள் தான் கூற வேண்டும். பாராளுமன்ற தேர்தல் குறித்து இந்தாண்டு இறுதியில் முடிவு எடுக்கப்படும். திருச்சியில் ஓ.பி.எஸ் தலைமையில் நடைபெற உள்ள மாநாட்டுக்கு என்னை அழைக்கவுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் இதுவரை என்னை சந்திக்கவில்லை, அழைக்கவில்லை.
அடுத்த ஆண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு சிறந்த புத்தாண்டாக இருக்கும். அதிமுக ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிடாதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.