Homeசெய்திகள்அரசியல்தவெகவை காலில் போடும் செருப்புக்கு சமமாக மிதித்து தூக்கிப்போட வேண்டும்-ஆர்.எஸ்.பாரதி..!

தவெகவை காலில் போடும் செருப்புக்கு சமமாக மிதித்து தூக்கிப்போட வேண்டும்-ஆர்.எஸ்.பாரதி..!

-

- Advertisement -

17 மாசத்துக்கு முன்னாடி பிறந்த ஒரு குழந்தை (தவெக) சவால் விடுகிறது என்றால் காலில் போடும் செருப்புக்கு சமமாக மிதித்து தூக்கிப்போட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும்” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரத்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ”பகிரங்கமாக இந்த மேடையில் சொல்கிறேன். நம்மை எதிர்த்துப் பேசிய அத்தனை தலைவர்களும் நமது மேடைக்கு தான் வந்தார்களே தவிர, நாம் யார் மேடைக்கும் செல்லவில்லை. ராஜாஜி மூட்டை பூச்சியை நசுக்குவதைப்போல நசுக்குவோம் என்றார். அதே ராஜாஜி நமது மேடையிலே ஏறி உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு கேட்டார். பெருந்தலைவர் காமராஜர் நம்மை எதிர்த்தார். ஆனால், அவர் சாவதற்கு முன்பாக கலைஞரை கட்டிப்பிடித்துக் கொண்டு நான் ஆட்சியை கலைக்க நினைத்தேன். உங்களை கைது செய்ய மத்திய அரசு நிர்ப்பந்தம் செய்தது என்றார்.

அறிவாலயத்தில் அண்ணாமலை ஒரு புல்லை கூட புடுங்க முடியாது - ஆர்.எஸ்.பாரதி ஆத்திரம்..!

கலைஞர் அவரது வீட்டுக்கு போய் காமராஜரிடம் கேட்டபோது, காமராஜர் கட்டி பிடித்துக் கொண்டு ”நீ இருந்தால் நான் வாழ்வேன். நீ ராஜினாமா செய்து விட்டால் என்னை ஜெயிலுக்கு அனுப்பி விடுவார்கள்” என்று சொல்லி கெஞ்சினார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு செத்தே போய்விட்டார். அந்த காமராஜர் இன்று உயிரோடு இருந்திருந்தால் திமுகவின் உறுப்பினராகி இருப்பார்.

அதேபோல எம்.ஜி.ஆர் கூட வெளிப்படையாக பேசினார். எம்.ஜி.ஆர் மறைவதற்கு முன்பாக கலைஞரை சந்தித்து இருந்தால் கட்சியை கலைஞரிடம் ஒப்படைத்து இருப்பார். ஆனால், சிலர் தடுத்தார்கள். அவர் சாவுக்குக்கூட மாலை வைத்து விடாமல் தடுத்தார்கள். எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கும் போது பக்கத்தில் இருந்த ஆர்.எம்.வீரப்பன்.அவரது கடைசி காலத்தில் ”தளபதிதான் என்னை காப்பாற்ற வேண்டும்” என்று திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார்.

கருணாநிதியின் வாழ்கை ஒரு சமூகப் புரட்சி!

அதேபோல சிவந்து ஆதித்தனார் நாம் தமிழர் கட்சி தொடங்கினார். பிறகு நாம் தமிழர் கட்சியை கலைத்து விட்டு திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். திமுகவை கைப்பற்றி அதை செய்வேன்… இதைச் செய்வேன்… என்று சொன்னவர்கள் எல்லாம் இன்று இருக்கிற இடம் தெரியாமல் போய்விட்டார்கள். ஆக, திமுகவை பொருத்தவரையிலும் 75 ஆண்டு காலத்தில் எல்லா தலைவர்களையும் பார்த்து, சந்தித்து உயர்ந்த கட்சி. 17 மாசத்துக்கு முன்னாடி பிறந்த ஒரு குழந்தை (தவெக) சவால் விடுகிறது என்றால் காலில் போடும் செருப்புக்கு சமமாக மிதித்து தூக்கிப்போட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

MUST READ