Homeசெய்திகள்அரசியல்2026 தேர்தலில் தவெக சிறிய சலசலப்பை ஏற்படுத்தும்: ஆனால் வெற்றி பெற முடியாது – ராஜ...

2026 தேர்தலில் தவெக சிறிய சலசலப்பை ஏற்படுத்தும்: ஆனால் வெற்றி பெற முடியாது – ராஜ கம்பீரன் பேட்டி

-

2026 தேர்தலில் சலசலப்பை தவெக வால் ஏற்படுத்த முடியுமே தவிர வெற்றி பெற முடியாது என மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான ராஜ கம்பீரன் அவர்கள் தனியார் youtube சேனல் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார்.

2026 தேர்தலில் தவெக சிறிய சலசலப்பை ஏற்படுத்தும்: ஆனால் வெற்றி பெற முடியாது – ராஜ கம்பீரன் பேட்டி

அதில் அவர் பேசும் போது காலம் முன்னேற்றத்தின் காரணமாக தற்போது அனைத்தும் டிஜிட்டல் மயமாக மாறியதால் ஊடகங்கள் வழியாக தேர்தல் களத்தில் பணியாற்றுகிறார்கள். இதை பயன்படுத்திக்கொண்டு ஆதவ் அர்ஜுன் போன்றவர்கள் தங்களின் வியூகத்தால் தான் கட்சிகள் தேர்தலில்  வெற்றி பெறுகிறாா்கள் என்ற பிம்பத்தை உருவாக்குகிறார்கள்.

ஆனால் கலைஞரின் 80 ஆண்டு கால அரசியல் அனுபவத்திலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  திருமாவளவனின்  40 ஆண்டு கால அரசியல் அனுபவத்திலும் எத்தனையோ வெற்றி தோல்விகளை சந்தித்திருக்கிறாா்கள். டிஜிட்டல் காலத்திற்கு முன்பு தேர்தலில் வெற்றி பெற பஞ்சாயத்து வாரியாக, தெருவாரியாக, வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு ஓட்டுக்களை கணக்கிட்டு தேர்தலில் வெற்றி பெற்றார்கள்.

அப்படி வியூக வகுப்பாளராக திமுகவில் நுழைந்தவர் ஆதவ் அர்ஜுன். பிறகு விசிகாவில் தன்னை இணைத்துக்கொண்டாா் . விடுதலை சிறுத்தை கட்சி ஆரம்பித்து 35 ஆண்டுகாலம் ஆகிறது. தலித் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் ஒடுக்கு முறைக்கு எதிரான இயக்கமாகத்தான் விடுதலை சிறுத்தை கட்சி உருவானது. அந்த கட்சியை அனைத்து தரப்பினராலும் ஜாதி ஒழிப்பு இயக்மாக தான் பார்க்கப்பட்டது.  இந்த பிம்பத்தை உடைப்பதற்காக தலித் அல்லாத பல்வேறு சமூகங்களை சார்ந்தவர்களுக்கு  கட்சியில் முக்கிய பொறுப்புகளை கொடுத்து விசிக பொது அரசியல் கட்சியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் திருமாவளவன் செயல்பட்டு வருகிறாா். அதன் ஒரு பகுதி தான் ஆதவ் அர்ஜுனுக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.

திருமா சட்ட கல்லூரியில் படுக்கும் போதே தனது மாணவப் பருவத்திலேயே ஈழ அரசியல் போராட்டத்தில் திமுகவின் ஆதரவாளராக செயல்பட்டார். ஆதவ் அர்ஜுன் வரவுக்குப் பிறகு விசிக வளரவில்லை, வளர்ந்த விசிக கட்சியில் தான் தன்னை இணைத்துக் கொண்டார் ஆதவ் அர்ஜுன்.

2026 தேர்தலில் தவெக சிறிய சலசலப்பை ஏற்படுத்தும்: ஆனால் வெற்றி பெற முடியாது – ராஜ கம்பீரன் பேட்டி

அதேபோன்று ஆதவ் அர்ஜுன் விசிக வளர்ச்சிக்காக சொந்த பணத்தை செலவு செய்ய வில்லை தன்னை கட்சியில் முன்னிலைப்படுத்திக் கொள்ள மட்டுமே செலவு செய்தார்.  மேலும் ஆதவ் அர்ஜுனை சேர்த்துக் கொண்டு கட்சியை வளர்க்க வேண்டிய நிலமை விசிகவிற்கு இல்லை. ஆனால் ஆதவ் அர்ஜுன் அதை தவறாக பயன்படுத்திக் கொண்டு தான் செர்ந்திருக்கும் கட்சியின் கொள்கைக்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டதன் காரணமாகவே அவர் நீக்கப்பட்டார்.

ஆதவ் அர்ஜுன் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைத்து கொண்டதற்கான  நோக்கமே ,திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை பிரிப்பது மட்டுமே நோக்கம். அதை செயல்படுத்த தான் பொது நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சியான திமுகவை பற்றி பல விமர்சனங்களை செய்தார். அவரது சுயரூபம் தெரிந்து கொண்ட திருமா அவரை கட்சியிலிருந்து இப்போது இடை நீக்கம் செய்துள்ளார். ஆனால் இப்பொழுது ஆதவ் அர்ஜுன் தான் விசிகவுக்கு செலவு செய்தது போலவும் திமுகவை ஆட்சியில் அமர வைத்ததே தான்தான் என்பது போலவும் சமூக வலைதளங்களில் பல போஸ்டர்களை பதிவிட்டு வருகிறார். மேலும் தன்னை கட்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு திமுகவின் அழுத்தமே காரணம் என்றும் திமுக கட்டுப்பாட்டுக்குள் திருமாவளவனை வைத்திருக்கிறது என்ற பிம்பத்தை உருவாக்கி வருகிறாா்.

2026 தேர்தலில் தவெக சிறிய சலசலப்பை ஏற்படுத்தும்: ஆனால் வெற்றி பெற முடியாது – ராஜ கம்பீரன் பேட்டி

விசிகாவிற்கு அழுத்தம் தர வேண்டிய சூழ்நிலை திமுகவிற்கு இல்லை. அதேபோன்று திருமாவும் அடங்கிப் போகிறவர் இல்லை , அவர்  கட்சியின் கொள்கையே அடங்க மறு, அத்துமீறு ,திமிரி எழு,திருப்பி அடி, என்பதுதான் அவர்களின் கொள்கை . திருமாவளவன் நாற்பது ஆண்டுகால அரசியலில் எத்தனையோ நெருக்கடிகளை சந்தித்து அதை எல்லாம் தாண்டித்தான் தனது கட்சியை வளர்தது  கொண்டு வந்துள்ளார்.அதிமுக போல் தடாலடியாக கட்சியில் இருப்பவரை  நீக்குவது போல் இல்லாமல். விசிக வின் நிர்வாக குழு ஆலோசனை செய்து நாகரீகத்தின் அடிப்படையில் காலதாமதமாக நடவடிக்கை எடுத்துள்ளாா்.  திமுகவிற்கு பயந்து வேறு எந்த காரணத்திற்காகவும் கட்டுப்பட்டவர் திருமா இல்லை.

திருமாவளவன் சொன்ன ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று என்றைக்கோ சொன்ன வார்த்தையை நூல் வெளியீட்டு விழாவில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சம கால அரசியல் பற்றிய விமர்சனங்கள் செய்ய வேண்டாம் என்ற அறிவுறுத்தியும் அவர் விமர்சித்ததால் தான் இடை நீக்கத்திற்கு காரணம்.

அன்றைய தேர்தல் ஜனநாயகத்தில் அரசியல் கட்சியின் வெற்றியை, கொள்கை தீர்மானத்தது.  இன்று பணம் தீர்மானிக்கின்றது. கொள்கை பேசுகின்ற சிறிய அரசியல் கட்சிகள் திமுக, அதிமுக, போன்ற பெரிய கட்சிகளுடன் இணைந்து தங்களை நிலை நிறுத்திக்கொள்கிறாா்கள்.2026 தேர்தலில் தவெக சிறிய சலசலப்பை ஏற்படுத்தும்: ஆனால் வெற்றி பெற முடியாது – ராஜ கம்பீரன் பேட்டி

விசிக விற்கு திமுகவிலிருந்து பிரிந்து தவெக கட்சியுடன் சேர வேண்டிய அவசியம் இல்லை.  ஏனென்றால் விஜய்க்கு தான் வெற்றி பெறுவோமா என்கிற சந்தேகம் இருக்கிறது, அதனால்தான் தனது கட்சியை பலம் பொருந்தியதாக மாற்ற, மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சிக்கிறார். இதில் முதல் கட்டமாக திருமாவை திமுக கூட்ணியில் இருந்து பிரித்து 2026 தேர்தல் களத்தில் வெற்றி பெற முயற்சியில் ஈடுபடுகிறார். தவெக வால் தேர்தலில் சலசலப்பை ஏற்படுத்த முடியுமே தவிர வெற்றி பெறுவது என்பது சந்தேகம் தான். அன்றிலிருந்து இன்று வரை பல திரைக்கலைஞர்கள் அரசியலில் ஈடுபட்டார்கள் அவர்கள் எல்லோரும் காணாமல் போய்விட்டாா்கள். இதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளது என்று ராஜ கம்பீரன் கூறியிருக்கிறார்.

ஆதவ் அர்ஜுனாவுக்கென தனி அஜெண்டா… சதியை தகர்த்த திருமா… உடைத்து பேசும் பத்திரிகையாளர் ப்ரியன்! 

MUST READ