பெண்களை அவமரியாதை செய்யும் அசுரன் உத்தவ் தாக்கரே என்றும் இதுவே அவரது கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணம்’ என்று பா.ஜ., எம்.பி.,யும், நடிகருமான கங்கனா ரனாவத் விமர்சனம் செய்துள்ளார்.
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. ‘இண்டியா’ கூட்டணிக்கு, 50 இடங்கள் மட்டுமே கிடைத்தன. அதில் உத்தவ் தாக்கரே கட்சி 20 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றதை குறித்து, மும்பையில் கங்கனா ரனாவத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், உத்தவ் தாக்கரேவின் மோசமான தோல்வியை நான் எதிர்பார்த்தேன். ஓட்டளித்த மஹாராஷ்டிரா மக்களுக்கு பாராட்டுகள். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை சிறப்பாக உள்ளது என அவர் பேசி உள்ளார்.
பெண்களை மதிக்கிறார்களா அல்லது அவர்களின் நலனுக்காக பாடுபடுகிறார்களா என்பதைப் பொறுத்தே யார் கடவுள் மற்றும் அசுரன் என்பதை நாம் அடையாளம் காண முடியும் என்றார். பெண்களை அவமரியாதை செய்யும் அசுரன் உத்தவ் தாக்கரே. இதுதான் அவரது கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணம். அவர்கள் என் வீட்டை இடித்துவிட்டு என்னை வார்த்தைகளால் திட்டினார்கள். இதுபோன்ற செயல்கள் விளைவுகளை ஏற்படுத்தும் என்பது எனக்கு தெரியும்.
மஹாராஷ்டிராவில் பா.ஜ., கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. பிரசாரத்தின் போது, ஒவ்வொரு குழந்தையும் ‘மோடி-மோடி’ என்று கோஷமிடுவதை நான் பார்த்தேன். பிரதமர் மோடி உலகின் மிகவும் பிரபலமான தலைவர். பா.ஜ., என்பது ஒரு பிராண்ட். இந்த பிராண்டை இந்திய மக்கள் நம்புகிறார்கள். பிரதமர் மோடியை யாராலும் வெல்ல முடியாது என நான் நம்புகிறேன். நாட்டை பிளவுபடுத்த விரும்பும் தலைவர்களுக்கு தேர்தல் முடிவுகள் ஒரு பாடமாக அமையும் என அவர் கூறி உள்ளார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: தனி இணையதளம் உருவாக்க வேண்டும் – விஜய் வலியுறுத்தல்!