Homeசெய்திகள்அரசியல்மோடியே சுவரை உடைச்சுக்கிட்டு ஓடினாரு... அண்ணாமலை எம்மாத்திரம்: உசுப்பேத்திய உதயநிதி..!

மோடியே சுவரை உடைச்சுக்கிட்டு ஓடினாரு… அண்ணாமலை எம்மாத்திரம்: உசுப்பேத்திய உதயநிதி..!

-

- Advertisement -

என்னை ஒருமையில் பேசியதன் மூலம் அண்ணாமலையின் தரம் அவ்வளவுதான் என்பது வெளிப்பட்டுள்ளது என துணைமுதல்வர் உதயநிதி பதிலடி கொடுத்துள்ளார். பிரதமர் மோடியை விமர்சித்து பேசியதால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உதயநிதியை ஒருமையில் பேசி கடுமையாகத் தாக்கி இருந்தார்.

அதற்கு பதிலடி கொடுத்துள்ள துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின். ”பிரச்சினையை மடைமாற்ற, திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். தமிழக அரசு கேட்கிற நிதியை மத்திய அரசிடம் இருந்து வாங்கி தருவதற்கு துப்பில்லை. தமிழ்நாட்டு மக்கள் ஏற்கனவே கோ பேக் மோடி என்று சொல்லியாச்சு.

மோடி அவர்கள் 2018 ல் வரும் போது திருட்டுத்தனமாக வந்து சுவர் எல்லாம் உடைத்து விட்டு போனார். மக்களை சந்திக்க வாய்ப்பு இல்லாமல் பயந்து கொண்டு எங்கே பார்த்தாலும் கருப்புக்கொடி காட்டிக் கொண்டிருந்தார்கள். கோ பேக் மோடி என்று பலூன் விட்டார்கள். அதை எல்லாம் மறக்க முடியுமா? ஆகையால் இந்தப் பிரச்சினையை திசை திருப்ப வேண்டாம். நமக்கு இப்போது நிதி வரவேண்டும்.

வால்போஸ்டர் ஒட்டுவதெல்லாம் ஒரு சாதனையா? வரச்சொல்லுங்கள். வீட்டில் தான் இருப்பேன். இன்று மாலை தான் இளைஞர் அணி நிகழ்ச்சி இருக்கிறது. ஏற்கனவே அறிவாலயத்துக்கு வந்து ஏதோ பண்ணுவேன் என்றார். தைரியமிருந்தால் அண்ணாசாலை பக்கம் வர சொல்லுங்கள். இது அந்த பிரச்சனை கிடையாது. தமிழ்நாட்டினுடைய நிதி உரிமையை கேட்டு வருகிறோம். அதற்கு உபயோகமாக ஏதாவது பண்ண முடிந்தால் பண்ணச் சொல்லுங்கள்.

தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது  - அண்ணாமலை கண்டனம்

அரசியல்வாதிகள் தனியார் பள்ளிகளை நடத்திக் கொண்டிருப்பதாக அண்ணாமலை சொல்கிறார். தனியார் பள்ளிகளை என்ன சட்ட விரோதமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்? ஒன்றிய அரசிடம் அனுமதி வாங்கித்தானே நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதையும், இதையும் ஏன் ஒப்பிட்டு பேசுகிறீர்கள்..? தனியார் பள்ளிகளில் காலையில் இலவச உணவு கொடுக்கிறார்களா ? தனியார் பள்ளிகளில் பள்ளி சீருடை இலவசமாக கொடுக்கிறார்களா? தயவுசெய்து அதனுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள்” எனத் தெரிவித்தார்.

 

MUST READ