Homeசெய்திகள்அரசியல்‘உள்துறை அமைச்சருக்கு பதிலாக டூரிஸ்ட் கைடாகலாம்...’அம்பேத்கர் பேச்சுக்கு அமித்ஷாவுக்கு உதயநிதி பதிலடி

‘உள்துறை அமைச்சருக்கு பதிலாக டூரிஸ்ட் கைடாகலாம்…’அம்பேத்கர் பேச்சுக்கு அமித்ஷாவுக்கு உதயநிதி பதிலடி

-

அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டைக் குறிக்கும் விவாதத்தின் போது மாநிலங்களவையில் நேற்று உரையாற்றிய அமித் ஷா, “பி.ஆர். அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவது இப்போது ஒரு “பேஷன்” ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று பேசுகிறார்கள். கடவுளின் பெயரை இவ்வாறு பலமுறை சொன்னாலாவது அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்.காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விஜய் இரங்கல்…

அம்பேத்கரின் பெயரை 100 மடங்கு அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், அவரைப் பற்றிய உங்கள் உணர்வு என்ன என்பதை நான் கூற விரும்புகிறேன். ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசாங்கத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து முதல் அமைச்சரவையில் இருந்து பி.ஆர்.அம்பேத்கர் ராஜினாமா செய்ய நேரிட்டது. பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினரை நடத்துவதில் திருப்தி இல்லை என்று அம்பேத்கர் பலமுறை கூறியுள்ளார். அவருக்கு ஒரு உத்தரவாதம் வழங்கப்பட்டது. அந்த உத்தரவாதம் நிறைவேறாததால், அவர் ராஜினாமா செய்தார்” என்று கூறி இருந்தார்.

'அயோத்தி ராமர்கோயில்'- காங்கிரஸ் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு!
Photo: Minister Amit Shah

இதகு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “எதெற்கெடுத்தாலும் அம்பேத்கர்.. அம்பேத்கர்.. என்று சொல்கிறார்கள்” என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவதூறாக பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.

எப்படி எங்கே செல்லலாம் என டூரிஸ்ட் கைடு வேலை பார்ப்பதற்கு பதிலாக, உள்துறை அமைச்சர் பொறுப்பை அமித்ஷா முதலில் சரிவர கவனிக்கட்டும்.

அண்ணல் அம்பேத்கர் தந்த அரசியலமைப்பு சட்டத்தை எப்படியாவது சிதைக்கலாம் என்று கங்கணம் கட்டி அலையும் பாசிஸ்ட்டுகளுக்கு, அம்பேத்கரின் பெயரைக் கேட்டாலே எரிச்சல் வருகிறது என்றால், இன்னும் பல நூறுமுறை அண்ணலின் பெயரை குரல் உயர்த்திச் சொல்வோம்! வாழ்க அம்பேத்கர்! அம்பேத்கர் புகழ் ஓங்கட்டும்!’’ எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘‘அதிக பாவங்களை செய்பவர்கள்தான் புண்ணியத்தைப்பற்றிக் கவலைப்பட வேண்டும். நாட்டைப்பற்றியும், மக்களைப்பற்றியும் அரசியல் சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேகர் பெயரைத் தான் சொல்வார்கள்’’ என கண்டனம் தெரிவித்து இருந்தார்.

MUST READ