தேவேந்திர குல வேளாளர்களுக்கும் பார்ப்பான்குல வப்பாட்டி மகன்னு தான் அர்த்தம் என சமூக செயற்பாட்டாளர், எழுத்தாளர் ஓவியா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ஓவியா பேசுகையில், ‘‘ கிருஷ்ணசாமி என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளட்டும். தேவேந்திர குல வேளாளர்களுக்கும் பார்ப்பான்குல வப்பாட்டி மகன்னு தான் அர்த்தம். நீ பேரை வேண்டுமானாலும் மாத்தலாம். சமீக நிலைமையை என்ன சொல்லி மாத்துவ? இல்ல புராணத்துல எழுதி வைச்சிருக்கிற கதையை நீ மாத்த முடியுமா? தேவேந்திர குல வேளாளருக்கு உள்ள புராணத்துல இருக்கிற கதையை நாம மாத்த முடியுமா?’’ எனப்பேசி இருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவரை சாதி வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். https://x.com/MaravarMallar/status/1859569890396422145
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சையாக பேசி சிக்கியவர் நடிகை கஸ்தூரி. அவர் மீது தமிழகத்தில் உள்ள காவல்நிலையங்களில் வழக்குப் பதியப்பட்டது. இதையடுத்து தலைமறைவான கஸ்தூரி, முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடினார். ஆனால் அவருக்கு முன்ஜாமீக் கொடுத்த நீதிபதி மறுத்தார்.
இதையடுத்து தனிப்படை அமைத்து நடிகை கஸ்தூரியை போலீசார் தேடி வந்த நிலையில், ஆந்திராவில் தலைமறைவாக இருந்த அவர் கடந்த 17ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
தொடர்ந்து நேற்று நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, தனது 2வது குழந்தை ஆடிஸம் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், நான் தான் கவனிக்க வேண்டும், அதுவும் சிங்கிள் பேரண்ட் என கூறி ஜாமீன் கேட்டார்.
இதற்கு தமிழக காவல்துறை எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்காததால் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.
இந்நிலையில், கஸ்தூரிக்கு ஒரு நியாயம், ஓவியாவுக்கு ஒரு நியாயமா? ஓவியாவையும் கைது செய்ய வேண்டும் என பரும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக நிர்வாகி திருப்பதி நாராயணன் தனது எக்ஸ் தளப்பதிவில், ‘‘தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசியதாக சொல்லி துடி துடித்து நடிகை கஸ்தூரியை கைது செய்து நீதியை நிலை நாட்டியதாக மார் தட்டிக்கொண்ட தமிழக அரசு, நம்முடைய தமிழ் மக்களான தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை அவதூறாக, கேவலமாக, தரம்தாழ்ந்து பேசிய சமூக செயற்பாட்டாளர், எழுத்தாளர் என்று அழைக்கப்படும் ஓவியாவை கைது செய்யாமல் அமைதி காப்பது ஏன்?
மிக கேவலமாக அச்சமுதாய மக்களின் பிறப்பு குறித்து பேசியும் இது வரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? உடனடியாக வன்கொடுமை சட்டத்தில் சிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் (PCR) கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெலுங்கு மக்கள் மீது உள்ள அன்பும், பாசமும் ஏன் தமிழர்கள் மீது அதுவும் பட்டியலினத்தவர் மீது இல்லை? ஓ!! நீங்கள் நீதிக்கட்சியின் நீட்சி என்பதால் தானா?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.