Homeசெய்திகள்அரசியல்அண்ணாமலை என்கின்ற வேதாளம் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்

அண்ணாமலை என்கின்ற வேதாளம் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்

-

- Advertisement -

அண்ணாமலை என்கின்ற வேதாளம் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்

சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துகோனின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து கீழே அமைக்கப்பட்டிருக்கும் அவர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை  செலுத்தினர்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,
ஓபிஎஸ், சசிகலா, தினகரனை அதிமுகவில் இணைக்க ஈபிஎஸ்-யிடம் முன்னாள் அமைச்சர்கள் வலியுறுத்தியதாக வரும் செய்திகள் எல்லாம் மாயை என தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும், இவை அனைத்தும் திட்டமிட்டு பரப்பப்படுகிறது எனவும் தெரிவித்திருக்கிறார்.

‘இந்தியன் 4’-ஆம் பாகம் இயக்கப் போகிறாரா சங்கர்? ….. அவரே சொன்ன பதில்!

நேற்று நடந்த அதிமுக ஆலோசனை கூட்டத்தில்  ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் சேர்க்கும் எண்ணம் இல்லை என்றும் ஈபிஎஸ் நிர்வாகிகளிடம் கூறியதாக தகவல் வந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த கருத்து குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து கேட்தற்கு, தமிழகத்தில் ஒரு மாதத்தில் நூற்றுக்கணக்கான கொலைகள் நடைபெற்று வருகின்றன. ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் படுகொலை செய்யப்படுகிறார்.

அதுவும் காவல் நிலையத்திற்கு அருகிலேயே படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். முழுமையான விவரம் வெளிவர வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை தேவை. தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகளை மாற்றினால் பிரச்னை சரியாகாது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மாற்றினால் தான் சட்ட ஒழுங்கு சரியாக இருக்கும்.
விக்கிரவாண்டி தேர்தல் நடைபெறும் இடத்திலேயே, கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிலர் அனுமதிக்கப்பட்டனர். தமிழக அரசு இருக்கிறதா என்று ஒரு சந்தேகம் எழுகிறது. மக்களை பாதுகாக்க கூடிய கட்டமைப்பில் அரசு தோல்வி அடைந்துள்ளது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

அண்ணாமலை என்கின்ற வேதாளம் தற்போது எங்களை விட்டுவிட்டு செல்வப் பெருந்தகை மீது ஏறி உள்ளது. லுங்கி அணிந்து கொண்டு பேட்டி அளிக்கிறேன் என அண்ணாமலை பேசியிருக்கிறார். லுங்கி அணிந்து கொண்டு பேட்டி அளிப்பது ஒன்னும் அவ்வளவு அவமரியாதை செயல் அல்ல, இன்று வரை சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் லுங்கி அணிகிறார்கள், இஸ்லாமியர்களும் லுங்கி அணிகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் இன்று லுங்கி அணிகிறார்கள். எனவே அது அவ மரியாதைக்குறிய செயல் அல்ல, நான் பெரும்பாலும் வேட்டி அணிந்து தான் பேட்டி கொடுப்பேன் என அவர் தெரிவித்தார்.

MUST READ