Homeசெய்திகள்அரசியல்தயிர் சாதத்துக்கே இவ்வளவு என்றால் நல்லி எலும்பு சாப்பிடுகிற எங்களுக்கு…? நிர்மலா சீதாராமனை வறுத்தெடுத்த...

தயிர் சாதத்துக்கே இவ்வளவு என்றால் நல்லி எலும்பு சாப்பிடுகிற எங்களுக்கு…? நிர்மலா சீதாராமனை வறுத்தெடுத்த வேல்முருகன்..!

-

- Advertisement -

”தயிர் சோறு சாப்பிடுகிற உனக்கு இவ்வளவு கோபம் இருந்தால், நல்லி எலும்பு சாப்பிடுகிற எங்களுக்கு எவ்வளவு கோபம் இருக்கும்?” என நிர்மலா சீதாராமனுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

"கேட்கும் தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை"- த.வா.க. தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. பேட்டி!

சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பேசுகையில், ” தமிழக முதலமைச்சரே இதுதான் சரியான நேரம். இதை சரியான களமாக மாற்றுங்கள். ஒருபோதும் எங்கள் தமிழக அரசு, தமிழ்நாட்டில் இயங்கக்கூடிய ஒன்றிய அலுவலகங்களுக்கு ஒத்துழைப்பு நல்க மாட்டோம். முதல் கட்டமாக எனக்கு பிடித்த தமிழ்நாட்டில் இருக்கிற அனைத்து சுங்க சாவடிகளிலும் உங்கள் தலைமையிலான திமுகவினுடைய தொண்டர்களும், பொதுமக்களும் வழிவிடா இயக்கத்தை அறிவியுங்கள்.

இங்கே இருக்கிற அத்தனை கூட்டணிக் கட்சித் தலைவர்களும் எனக்கு பிடித்த சுங்கச்சாவடியில் வழி விட மறுப்போம். இரண்டாவது ஜிஎஸ்டி தரமாட்டோம் என்று அறிவியுங்கள். சி.பி.எஸ்.சி.இ என்று சொல்லக்கூடிய அந்த பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு எந்த வகையிலும் உறுதுணையாக இருக்காது என்று அறிவியுங்கள். 5 மாநிலங்களுக்கு மின்சார உற்பத்தி செய்கிற என்னுடைய தொகுதியில் இருக்கிற என்எல்சி நிறுவனம் நிலங்களை கையகப்படுத்தி, அதற்கு விவசாயிகளை அழித்து என்எல்சி மின்சாரம் தயாரிக்கிறார்கள்.

வருமான வரியை குறைக்க மத்திய அரசு முடிவு?

அதற்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அனைவரையும் திரும்ப பெறுங்கள். அதானி துறைமுகத்திற்கு துணை நிற்க மாட்டோம் எனச் சொல்லுங்கள். பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் கையகப்படுத்தீ தர மாட்டோம் என சொல்லுங்கள். தமிழ்நாட்டின் இன உணர்ச்சியில், சுயமரியாதையில், தன்மானத்தில் மத்திய அரசு கையை வைத்துக் கொண்டு இருக்கிறது. நாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனநாயக அரசு என்பதற்காக எவ்வளவோ பணிந்து போய்க் கொண்டிருக்கிறோம்.

எவ்வளவோ தீர்மானங்களை நிறைவேற்றி அனுப்புகிறீர்கள். ஒன்றுக்கும் மரியாதை இல்லை. குப்பையை போல் தூக்கி எறிகிறார்கள். இந்திய நாட்டினுடைய நாடாளுமன்றத்தில் அருமை சகோதரி கனிமொழியில் இருந்து, ஆ.ராசாவிலிருந்து ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும், அண்ணன் டி. ஆர். பாலுவில் இருந்து அத்தனை பேரும் இந்த நாட்டுக்கு செய்கின்ற மோடி அரசின் சங் பரிவார கும்பலின் அநியாய, அக்கிரமங்களை கிழித்து தொங்க விடுகிறார்கள்."தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?" – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தலைவர் கலைஞருக்கு பிறகு ஒட்டுமொத்த நாடாளுமன்றத்தை இந்த 40 எம்.பி., களும் கிழித்து தொங்க விடுகிறார்கள். ஆற்றல் வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம் ஆட்கள் கேட்கிற ஒவ்வொரு கேள்விகளுக்கும் சங்கி கும்பல்களால் பதில் சொல்ல முடியவில்லை. நிர்மலா சீதாராமன் கதறுகிறார். தயிர் சோறு சாப்பிடுகிற உனக்கு இவ்வளவு கோபம் இருந்தால், நல்லி எலும்பு சாப்பிடுகிற எங்களுக்கு எவ்வளவு கோபம் இருக்கும்? என் மண்ணுக்கும், என் மக்களுக்கும் நீ செய்த துரோகம் ஒழியட்டும்” என உணர்சி பொங்கப்பேசினார் வேல்முருகன்.

MUST READ