spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்‘பாஜகவின் ‘பி’டீம்தான் விஜய்...’ஆதாரங்களை அடுக்கிய ப்ளூசட்டை மாறன்..!

‘பாஜகவின் ‘பி’டீம்தான் விஜய்…’ஆதாரங்களை அடுக்கிய ப்ளூசட்டை மாறன்..!

-

- Advertisement -
kadalkanni

‘‘தனது அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என மாநாட்டில் முழங்கிய விஜய் நிஜத்தில் திமுகவிற்கு எதிராக மட்டுமே கத்திச்சண்டை போடுகிறார்’’ என சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன் விமர்சித்துள்ளார்.

முழுக்க முழுக்க ஆதவ் டெல்லியுடைய ஆள் - போட்டுடைக்கும் ஜீவசகாப்தன்!

இதுகுறித்து தனது எக்ஸ்தள பதிவில், ‘‘மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வசனம் மூலம் பாஜகவை மறைமுகமாக கிண்டலடித்தார் விஜய். அதற்கு அக்கட்சியினர் கடும் எதிரப்பு தெரிவித்தனர். அதன்பிறகு ரெய்டு வந்தது. பிறகு, சர்கார் ஆடியோ லாஞ்சில் ரெய்டு இல்லாத வாழ்க்கை வேண்டும். கம்முனு இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும் என்று பம்மினார்.

விக்கிரவாண்டி மாநாட்டில் பகவத்கீதை நூலை அன்பளிப்பாக பெற்றுக்கொண்டார். மாநாட்டில் 95% திமுகவை மட்டும் தாக்கினார். பிளவுவாத சக்தி என மேம்போக்காக ஈயம்பூசினார் (பாஜகவை கண்டித்து விட்டாராம்)

அம்பேத்கர் நூல் வெளியீட்டில் காஞ்சி மகா பெரியவரை நல்லவர் என ஆதவ் அர்ஜூனா குறிப்பிட்டார். ரமணர், சாய்பாபா உள்ளிட்ட பல துறவிகள் இருந்தும் அவர்களில் ஒருவரின் பெயரையும் சேர்த்து குறிப்பிடவில்லை.

அதன்பிறகு பேச வந்த விஜய்யும் இதுபற்றி எதுவும் பேசவில்லை. அந்நிகழ்ச்சி யில் வழக்கம்போல திமுகவை மட்டும் சாடினார் விஜய். திமுகவை விஜய் விமர்சிக்க ஆரம்பித்தது முதல், இன்று ஆளுநரை சந்தித்தது வரை விஜய்யை உடனுக்குடன் பாஜக தலைவர்கள்தான் அதிகம் பாராட்டுகிறார்கள்.

தனது அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என மாநாட்டில் முழங்கிய விஜய் நிஜத்தில் திமுகவிற்கு எதிராக மட்டுமே கத்திச்சண்டை போடுகிறார். எங்கே தன்னை பாஜகவின் பி டீம் என சொல்லி விடுவார்களோ என்பதற்காக லேசாக பாஜகவை கண்டிப்பதாக காட்டிக்கொள்வதாக தெரிகிறது.

இரு கட்சிகளையும் சமமாக தராசில் வைத்து விமர்சிக்காதவரை உங்களை பாஜகவின் பி டீம் என்றே கருத வேண்டியுள்ளது. அதற்குத்தான் இத்தனை உதாரணங்கள்’’ எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ