Homeசெய்திகள்அரசியல்விஜய் நடத்திய த.வெ.க. பிரம்மாண்ட மாநாடு... களத்தில் இறங்கிய உளவுத்துறை!

விஜய் நடத்திய த.வெ.க. பிரம்மாண்ட மாநாடு… களத்தில் இறங்கிய உளவுத்துறை!

-

நடிகர் விஜயின் த.வெ.க., மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகளில் தமிழக உளவுத்துறையினர் களம் இறங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ள நடிகர் விஜய், விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் கடந்த மாதம் 27ம் தேதி பிரம்மாண்ட மாநாட்டை நடத்திக் காட்டினார். லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு மற்ற அரசியல் கட்சிகளை மிரள வைத்தனர்.

அரசியல் கட்சி, மாநாடு, 2026ம் ஆண்டு தேர்தல் களம், யாருடன் கூட்டணி என நடிகர் விஜயின் தொடர் அறிவிப்புகள் த.வெ.க., தொண்டர்களை உற்சாகப்படுத்தியது. தமிழகம் முழுவதும் ஆக்டிவ் அரசியல் என்ற ஸ்டைலை நோக்கி தொண்டர்களும், நடிகர் விஜயின் ஆதரவாளர்களும் நகர ஆரம்பித்துவிட்டதாக பேச்சுகள் எழுந்து வருகின்றன. 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க., தலைமையில் கூட்டணி என்று நடிகர் விஜய் அறிவித்துவிட தேர்தல் களமும் மாற ஆரம்பித்துள்ளது.

நேரிடையாக, தனித்து தேர்தலை எதிர்கொண்டால் மட்டுமே கட்சியின் உண்மையான பலம், ஓட்டு வங்கி உள்ளிட்ட அம்சங்கள் தெரிய வரும். அதுவரை கட்சிக்கான செல்வாக்கு என்ன என்பதை கூறுவது தவறான கணிப்பாகிவிடும் என அரசியல் விமர்சகர்கள் கூறி உள்ளனர்.

இந்நிலையில் விழுப்புரம் மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் யார் என்ற விவரங்களை சேகரிக்கும் பணியில் உளவுத்துறை இறங்கி உள்ளதாக தெரிகிறது. கூட்டத்துக்கு வந்தவர்கள் யார், யார்? மற்ற கட்சிகளில் இருந்தாலும், நடிகர் விஜய் ரசிகராக இருப்பவர்கள் எத்தனை பேர் கலந்து கொண்டனர் என்ற விவரங்களை மாவட்ட நிர்வாகிகளிடம் உளவுத்துறை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, சென்னையில் இருந்து மாநாட்டுக்கு சென்றவர்களின் விவரங்களில் உளவுத்துறை அதிக கவனம் செலுத்துவதாக தெரிகிறது. சென்னையில் உள்ள வார்டுகள் வாரியாக பட்டியல் தொகுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எந்தெந்த வார்டுகளில் எத்தனை பேர் த.வெ.க., உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களில் எத்தனை பேர் மாநாட்டில் கலந்து கொண்டனர் என்ற விவரங்களை சேகரித்து வருவதாக தெரிகிறது.விஜய்க்கு அரசியலில் செயல்படும் திறன் இருக்கிறது...... பார்வதி நாயர் பேச்சு!

இதுதவிர, கலந்து கொண்டவர்களில் எந்த வயதுடையோர் அதிகம், அவர்களுக்கு ஓட்டுரிமை இருக்கிறதா, மகளிர் அதிகம் பேர் கலந்து கொண்டனரா, தாய்மார்கள் ஆதரவு யாருக்கு என்ற கூடுதல் விவரங்களையும் சேகரிக்க தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. த.வெ.க., நிர்வாகிகள் பலரிடமும் மேற்கண்ட தகவல்களை திரட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

MUST READ