தமிழ்நாட்டில் திமுகவிற்கு மாற்று அதிமுக என்ற நிலையை மாற்றி திமுகவா அல்லது தமிழக வெற்றிக் கழகமா என்ற இடத்தை நோக்கி கட்சியை நகர்த்த நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் இன்று நடைபெற்றது.
அந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசினார். அப்போது அவருடைய பேச்சில் ஆளும் கட்சி, எதிர் கட்சி அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் வச்சி செய்திருந்தார். அதாவது இரண்டு கட்சிகளும் ஊழல் கட்சிகள் என்றும் விஜய் பேசினார்.
மேலும் தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. எவருடைய கடவுள் நம்பிக்கையிலும் நாங்கள் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. ஆனால் அதைத்தவிர பெரியாரின் பெண் விடுதலை, பெண் கல்வி, சாதி மதம் வேறுபாடு போன்ற பெரியாரின் கொள்கையைதான் பின்பற்றப் போகிறோம் என்று பேசினார்.
தமிழ்நாட்டில் தந்தை பெரியாரை முன்னெடுத்து அரசியல் செய்து வருவது திமுக மட்டுமே, அதிமுக பெரியாரின் சித்தாந்த அரசியலில் இருந்து விலகி நீண்டதூரம் சென்று விட்டது. மேலும் அதிமுக சமீபகாலமாக சரிவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் அதிமுக தவறவிட்ட பெரியாரின் கொள்கைகளை விஜய்யின் தவெக கையிலெடுத்துள்ளது. அதனால் தமிழகத்தில் திமுக வா? தவெகவா? என்ற போட்டியில் பக்கா பிளானுடன் களம் விஜய் இறங்கியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.